முரளி சுழலில் நியூசி., திணறல்

காலே டெஸ்டில் இலங்கையின் முரளிதரன் சுழலில் மிரட்ட, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து திணறுகிறது. இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி காலேயில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 452 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட் இழப் புக்கு, 87 ரன்கள் எடுத்திருந்தது.

மெக்கின்டோஸ் அரை சதம்: நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணியின் ஜீத்தன் படேல் (26), முரளிதரன் சுழலில் சிக்கி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த ரோஸ் டெய்லர் (35) ஓரளவு நம்பிக்கை தந்தார்.

மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மெக்கின்டோஸ் அரைசதம் கடந்தார். இவர் 69 ரன்கள் எடுத்த நிலையில், முரளிதரன் சுழலில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜெசி ரைடர் (42) அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப் பட்ட பிரண்டன் மெக்கலம் (1), ஜேக்கப் ஓரம் (12) சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றினர். நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்து, 171 ரன்கள் பின்தங்கி இருந்தது. ஓ பிரையான் (3), கேப்டன் வெட்டோரி (33) அவுட்டாகாமல் இருந்தனர்.

இலங்கை சார்பில் முரளிதரன், திலன் துஷாரா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

0 comments:

Post a Comment