இந்தியா முன்னேற்றம்

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் பதக்க லீக் 2-ம் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

பாஸ்டனில் புதன்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா 6-0 என பெலாரûஸ வீழ்த்தியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே பாதுகாப்பான ஆட்டத்தை மேற்கொண்டன. 16-வது நிமிடத்தில் கேப்டன் ரஞ்சிதா தேவி எடுத்துக் கொடுத்த பந்தை கச்சிதமாக கோலாக்கினார் ரோஸ்லின் டங் டங்.

அதன் பின்னர் சமன் செய்ய பெலாரஸ் வீராங்கனைகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய வீராங்கனைகள் அபாரமாக சமாளித்தனர்.

பெலாரஸ் அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னரை கோலாக்கவிடாமல் கோல்கீப்பர் ஜஸ்தீப் கெüர் அற்புதமாகத் தடுத்தார்.

ஆட்டத்தின் 2-வது பாதி முழுவதும் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். 38-வது நிமிடத்தில் பூனம் ராணி இந்தியாவின் 2-வது கோலை அடித்தார்.

51-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை வெற்றிகரமாக கோலாக்கினார் ரிது ராணி.

அதுவரை கோல்கீப்பராக இருந்த வெரானிகாவுக்கு பதிலாக யாவுஹெனியா லெட்ஸ்கோவை களமிறக்கியது பெலாரஸ். இருந்தும் இந்திய வீராங்கனைகளின் கோல் வேட்டையை பெலாரஸ் அணியால் தடுக்க முடியவில்லை.

ஆட்டத்தின் 53, 54, 58-வது நிமிடங்களில் "ஹாட்ரிக்' கோல் அடித்தார் ராணி தேவி.

இதையடுத்து இந்தியா 6-0 என்ற கணக்கில் வென்றது.

இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை இந்தியா இதற்கு முந்தைய ஆட்டத்தில் தோற்கடித்தது. இந்தியா தனது பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக்காவுடன் வியாழக்கிழமை மோதுகிறது.

இப்பிரிவில் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் வென்று 6 புள்ளிகளை எடுத்துள்ளதால் பதக்க லீக் 2-ம் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது.

0 comments:

Post a Comment