சாதிப்பாரா ஷரபோவா

டென்னிஸ் உலகில் காயம் காரணமாக அவதிப்படும் வீராங்கனைகளில் முக்கியமானவர் ரஷ்யாவின் மரியாஷரபோவா. முன்னாள் "நம்பர்-1' வீராங்கனையான இவர் 3 முறை கிராண்ட்ஸ் லாம் பட்டம் வென்றுள் ளார். சமீபகாலமாக காயம் காரணமாக நிறைய தொடர்களில் பங்கேற்காதது, அடுத்தடுத்து விரட்டிய தோல்விகளால் ரேங்கிங்கிலும் பின்தங்கினார்.

சமீபத்தில் நடந்த விம்பிள்டன் தொடரின் 2வது சுற்றிலேயே தோல் வியடைந்து வெளியேறினார். இதனால் ரேங்கிங்கில் 62 வது இடத்துக்குபின்தள்ளப்பட்டார்.தற்போது வலது தோள் பட்டை காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள இவர், மீண்டும் சாதிக்கதயாராகிறார். வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இழந்த பெருமையை மீட்ககாத்திருக்கிறார்.

இது குறித்துஷரபோவா கூறியது:எனது 14 வயதில் துவங்கிய டென்னிஸ் பயணம் 22 வயது வரை தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. இதில் மீண்டு வருவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தற்போது நிறைய பெண்கள் டென்னிசிற்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அனுபவம் போதாது. என்னுடையதொழிலான டென்னிஸ் குறித்து நிறைய கற்றுள்ளேன். எப்படியும் இந்த ஆண்டு சோகமாக செல்லாது. சிறப்பாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

மீண்டும் டென்னிஸ்

காயங்கள் ஏற்படுவது எல்லோருக்கும் வழக்கமானது தான். இதுவிளையாட்டில் ஒரு பகுதிதான். இந்த காயத்திற்கு ஆப்பரேஷன் செய்த பின், நூறு சதம் குணமடைந்துள்ளேன். இப்போது டென்னிஸ் போட்டிகளில் விளையாட தயாராக உள்ளேன்.கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து விட்டு, சிறந்த முறையில் மீண்டு வருவேன். ரேங்கிங்கில் முன்னுக்கு வருவேன். யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்பு, லாஸ் ஏஞ்சல்சில் நடக்க இருக்கும் டென்னிஸ் தொடரில் கலந்து கொள்ள உள்ளேன். வரும் காலங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன். இவ்வாறுஷரபோவா கூறினார்

0 comments:

Post a Comment