முன்னணி வீரர்களுக்கு "கல்தா'

தென் ஆப்ரிக்காவில் நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கெய்ல், சர்வான் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு "கல்தா' கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு.

சம்பள ஒப்பந்தம், வீரர்கள் பாதுகாப்பு போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கெய்ல், சர்வான், சந்தர்பால் போன்ற முன்னணி வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வங்க தேசஅணிக்கு எதிரான தொடரை புறக்கணிப்புசெய்தனர்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் அணியை அறிவித்துள்ள போர்டு, போராட்டம் செய்த சீனியர் வீரர்களுக்குசரியான கசையடி கொடுத்துள்ளது.

அணியில் கெய்ல், சந்தர்பால், சர்வான், பிராவோ, டெய்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு "கல்தா' கொடுத்து அதிர்ச்சி அளித்துள்ளது. அணி விபரம்: ரெய்பர் (கேப்டன்), சமி(துணைக்கேப்டன்), பெர்னார்டு, பெஸ்ட், கிராண்டன், டவ்லின், பிளட்சர், மில்லர், பாவல், பாவல், டேல் , ரோச், ஸ்மித், டாங்க், வால்டன்.

0 comments:

Post a Comment