லாராவின் அடுத்த இலக்கு

டிரினிடாட் அண்ட் டுபாகோ அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா. உள்ளூர் "டுவென்டி-20' சாம்பியன்கள் பங்கேற்கும், சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் வரும் அக். 8 ம் தேதி இந்தியாவில் துவங்கு கிறது.

இதில் பங்கேற்க உள்ள அணிகளுள் வெஸ்ட் இண்டீசின் "டிரினிடாட் அண்ட் டுபாகோ அணிக்கு முன்னாள் வீரர் பிரையன் லாரா பயிற்சி அளிக்க உள்ளார். இவர் ஓய்வுக்குப் பின் அங்கீகாரம் இல்லாத ஐ.சி.எல்., தொடரில் விளையாடினார்.

தற்போது வெஸ்ட் இண்டீசின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்துள்ளார். இது குறித்து லாரா கூறுகையில்,"" டிரினிடாட் அணிக்கு பயிற்சி அளிப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறேன். ஆனால் எதுவும் முடிவு செய்யப்பட வில்லை,'' என்றார்.

0 comments:

Post a Comment