செய்னாவின் ஒலிம்பிக் கனவு

சர்வதேச பாட்மின்டன் அரங்கில், இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார் செய்னா நேவல். தொடர்ந்து
அபாரமாக ஆடி வரும் இவர், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை குறிக்கொளாக கொண்டுள்ளார்.தற்போது 19 வயதான செய்னா, தனது 8வது வயது முதல் பாட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த பீஜிங் ஒலிம்பிக் ஒற்றையர்பிரிவில் காலிறுதி வரை முன்னேறினார். இதன்மூலம், ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். சமீபத்தில் நடந்த சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து இப்பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத் தார். சர்வதேச பாட் மின்டன் ரேங்கிங்கில் 6வது இடத்திற்கு முன்னேறினார்.

தனது எதிர்கால திட்டங்கள் குறித்த செய்னா அளித்த பேட்டி:இந்தியா சார்பில் நிறைய போட்டிகளில் பங்கேற்று, பல வெற்றிகளை குவித்துள்ளேன். இருப்பினும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் தொடரில் கிடைத்த வெற்றி முற்றிலும் மாறுபட்டது. இதன்மூலம் ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சானியா ஒப்பீடு

கிரிக்கெட் இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. இது ஜாதி, மதம் போல வேரூண்றி நிலைத்து நிற்கிறது. இவ்வாரு கூறுவதால், நான் கிரிக்கெட்டுக்குஎதிரி அல்ல. இருப்பினும், ஒவ்வொரு விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சாவுக்கு இணையாக என்னைப்பற்றி பேசுவது, மகிழ்ச்சியாக இருக்கிறது. இது போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஊக்கமளிக்கிறது.

பாட்மின்டன் வளர்ச்சி

டென்னிஸ் போட்டிகளுக்கு இணையாக பாட்மின்டன் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. ரசிகர்கள் ஆதரவு டென்னிஸ் போட்டிகளுக்கு அதிகம். இதற்கு பணம் முக்கிய காரணம். டென்னிஸ் தொடர்களை நடத்த அதிக ஸ்பான்சர்கள் உள்ளனர். ஆனால், பாட்மின்டனுக்கு யோனக்ஸ் என்றநிறுவனம் மட்டுமே உள்ளது.

பயிற்சியாளர் மற்றும் பெற்றோர்

பயிற்சியாளர் கோபிசந்த் எனது வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கிறார். போட்டிக்கு முன் போதுமான பயிற்சி அளிக்கிறார். இதுதவிர, எனது பெற்றோர்கள் முழு ஆதரவு அளிக்கின்றனர். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வது மற்றும் சர்வதேச பாட்மின்டன் ரேங்கிங்கில் முதலிடம் பிடிப்பது தான் எனது எதிர்கால கனவு. இவ்வாறு செய்னா நேவல் கூறினார்

0 comments:

Post a Comment