ஆஷஸ் தொடரில் லார்ட்ஸ் டெஸ்டின்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை சூதாட்டக்காரர் அணுகியதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) புதன்கிழமை தெரிவித்தது.
வீரரை சூதாட்டக்காரர் அணுகியது குறித்து ஐசிசியின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பிடம் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் புகார் அளித்துள்ளது.
இந்த முயற்சியின் காரணமாக எந்தவித முறைகேடுகளும் நடந்ததற்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
இதற்காக வீரருக்கும், ஆஸ்திரேலிய அணிக்கும் ஐசிசி பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முகமது அசாருதீன், தென் ஆப்பிரிக்காவின் ஹான்ஸி குரோனியே, பாகிஸ்தானின் சலீம் மாலிக் ஆகியோர் சூதாட்டக்காரர்களுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து 2000-ம் ஆண்டு ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment