சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை டுபாயில் நேற்று முன்தினம் வெளியிட்டது.இந்தத் தரப்பட்டியல் அணிகளின் முந்தைய செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
சமீபகாலமாக தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.இதன்மூலம் 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியது.
தென்னாபிரிக்க அணி 127 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலிருக்கிறது.அவுஸ்திரேலிய அணி(119 புள்ளி) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.இங்கிலாந்து அணி (111 புள்ளி) இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடம் பிடித்தது.நியூஸிலாந்து(110 புள்ளி),பாகிஸ்தான்(107 புள்ளி),இலங்கை(106 புள்ளி),மேற்கிந்தியா( 78 புள்ளி),பங்களாதேஷ்( 54 புள்ளி),அயர்லாந்து (27 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "முதல்10' வரிசையில் இடம்பெற்றன.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் முதலிடத்திற்கு முன்னேறலாம்.
0 comments:
Post a Comment