டெஸ்ட் தரவரிசைகளில் இந்தியா நாலாமிடத்திற்கு தள்ளப்பட்டது

சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில், இலங்கை அணி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி ஒரு இடம் பின்தங்கி நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதில், மூன்றாவது இடத்திலிருந்த இந்திய கிரிக்கெட் அணி (119 புள்ளிகள்) ஒரு இடம் பின்தங்கி 4 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமீபத்தில் கைப்பற்றி அசத்திய இலங்கை அணி, 119 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியா,இலங்கை அணிகள் ஒரே புள்ளிகள் பெற்றிருப்பினும், 0.01 "டெசிமல் ரேட்டிங்' வேறுபாட்டில் இலங்கை அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

அவுஸ்திரேலிய அணி (124 புள்ளிகள்) முதலிடத்திலும், தென்னாபிரிக்கா (122 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலுமுள்ளன.

ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில், அவுஸ்திரேலிய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் உள்ளது. தோற்கும் பட்சத்தில் 2003 ஆம் ஆண்டு முதல், முதலிடத்தில் இருந்துவரும் அவுஸ்திரேலியா தனது பெருமையை இழக்க நேரிடும்.

0 comments:

Post a Comment