ஊக்கமருந்து ஒப்பந்தம் தொடர்பான பிரச்னைக்கு அனில் கும்ளே நல்ல தீர்வு காண்பார்,'' என, யுவராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக ஊக்கமருந்து தடுப்பு மையம், புதிய பரிசோதனை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் படி, ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வீரர்கள் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
மூன்று மாதங்களுக்கு முன்பே, இத்தகவலை தெரிவித்து விட வேண்டும். இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர். இவர்களது முடிவுக்கு இந்திய கிரிக்கெட் போர்டும் (பி.சி.சி.ஐ.,) ஆதரவு அளித்துள்ளது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, 5 பேர் கொண்ட குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நியமித்துள்ளது.
இக்குழுவில் ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி ஹரூன் லார்கட், முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், ஐ.சி.சி.,யின் தலைமை ஆலோசகர் ஐ.எஸ்.பிந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இந்திய வீரர்கள் மற்றும் உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திடம் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இக்குழுவில் இடம் பெற்றுள்ள முன்னாள் இந்திய கேப்டன் அனில் கும்ளே, ஊக்கமருந்து தொடர்பான பிரச்னைக்கு நல்ல தீர்வு காண்பார் என்கிறார் இந்திய வீரர் யுவராஜ்.
இது குறித்து அவர் கூறியதாவது:முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே அறிவுத்திறம் மிக்கவர். கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை, தனது நுட்பமான அணுகுமுறை மூலம் நீக்குவார். அவர் மீது இந்திய வீரர்கள் அனைவருக்கும் நம்பிக்கை உள்ளது. இவ்வாறு யுவராஜ் கூறினார்
0 comments:
Post a Comment