ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் பட்டியலில் இந்திய அணி 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ஒருநாள் அணிகளுக்கான ரேங்கிங்கை(தரவரிசை) துபாயில் நேற்று வெளியிட்டது. இந்த ரேங்கிங், அணிகளின் முந்தைய செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டு ஆண்டுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.
சமீபகாலமாக தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதன்மூலம் ரேங்கிங்கில் 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியது. தென் ஆப்ரிக்க அணி 127 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
ஆஸ்திரேலிய அணி (119 புள்ளி) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி (111 புள்ளி) இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடம் பிடித்தது. நியூசிலாந்து (110 புள்ளி), பாகிஸ்தான் (107 புள்ளி), இலங்கை (106 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (78 புள்ளி), வங்கதேசம் (54 புள்ளி), அயர்லாந்து (27 புள்ளி) உள்ளிட்ட அணிகள் "டாப்-10' வரிசையில் இடம் பெற்றன.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் முதலிடத்திற்கு முன்னேறலாம்.
0 comments:
Post a Comment