சென்னையில் நடைபெறும் 13-வது உலக ஜூனியர் மகளிர் ஸ்குவாஷ் குழு போட்டியில் இந்தியா 3-0 என இங்கிலாந்தை வீழ்த்தியது.
புதன்கிழமை நடைபெற்ற "பி' பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா பலிக்கல் 23 நிமிடங்களில் 11-6, 11-5, 11-7 என மில்லி டாம்லின்சனை வீழ்த்தினார்.
சுரபி மிஸ்ரா 20 நிமிடங்களில் 11-9, 11-3, 11-7 என கிம்பர்லி ஹேயை எளிதாகத் தோற்கடித்தார்.
அனாகா அலன்கமோனி 49 நிமிடங்கள் போராடி 15-13, 8-11, 14-12, 9-11, 11-7 என ஜூலியான் கோர்டûஸ சாய்த்தார்.
வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் எகிப்துடன் இந்தியா மோதுகிறது.
"ஏ' பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3-0 என ஸ்வீடனையும், எகிப்து 3-0 என நியூஸிலாந்தையும் வென்றன.
"பி' பிரிவில் ஜெர்மனி 2-1 என பிரான்ûஸயும், "சி' பிரிவில் நெதர்லாந்து 2-1 என டென்மார்க்கையும், ஹாங்காங் 3-0 என மலேசியாவையும், "டி' பிரிவில் அமெரிக்கா 2-1 என கனடாவையும், தென் ஆப்பிரிக்கா 3-0 என ஸ்பெயினையும் வீழ்த்தின.
0 comments:
Post a Comment