சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணி

வரும் அக்டோபரில் இந்தியாவில்நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணிக்கு வாய்ப்பு வழங் கப்படும் என்று தெரிகிறது. ஐ.சி.எல்., வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்தின் நார்தாம்டன்ஷயர் அணிக்கு மறுப்பு தெரிவிக் கப்பட்டு உள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் வரும் அக். 8 முதல் 23ம் தேதி வரை, டில்லி மற்றும் பெங்களூருவில் சாம்பியன்ஸ் லீக் டுவென்டி-20' தொடர் நடக்க உள்ளது. இதில் ஏழு நாடுகளை சேர்ந்த 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்தியாவில் இருந்து ஐ.பி.எல்., தொடரில் முதல் இரு இடங்களை பெற்ற டெக் கான் சார்ஜர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற டில்லி டேர்டெவில்ஸ் என 3 அணிகள் பங்கேற் கின்றன. தவிர ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவில் இருந்து தலா இரு அணி கள், நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீ சில் இருந்து தலா ஒரு அணிகள் பங்கேற்கின்றன.

இங்கிலாந்தில் இருந்து பங்கேற்கும் இரு அணிகளில் நார்தாம்டன்ஷயர் அணிக்கு ஐ.பி.எல்., நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.,) அமைப்பில் பங்கேற்று விளையாடிய தென் ஆப்ரிக்க வீரர்கள் நிக்கி போயே, ஆன்ட்ரூ ஹால், வான் டர் வாத் என்ற மூன்று வீரர்கள் இங்கிலாந்தின் உள்ளூர் "டுவென்டி-20' அணியான நார்தாம்டன்ஷயர் அணியில் விளையாடி வருகிறார்கள்.

தெளிவான விதி: இந்த அணி குறித்து ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி கூறுகையில், ""சாம்பியன்ஸ் லீக் விதிகள் தெளிவாக உள்ளது. ஐ.சி.எல்., சார்பில் விளையாடிய வீரர்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது. இவர்கள் இடம் பெற்றுள்ள அணிகளுக்கு அனுமதி கிடையாது. ஒருவேளை நார்தாம்டன்ஷயர் அணி அங்கு நடக்கும் தொடரில் பைனலில் பங்கேற்றாலும் சாம்பியன்ஸ் லீக் தொடரில், பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது.

அந்த இடம் காலியானதாகவே கருதப்படும்,'' என்றார்.சென்னைக்கு வாய்ப்பு?:ஒருவேளை இடம் காலியாக இருந்தால், அந்த அணிக்கு பதிலாக இரண் டாவது கட்ட ஐ.பி.எல்., தொடரில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே பாகிஸ்தானின் உள்ளூர் "டுவென்டி-20' சாம்பியன் அணிக்கு, இந்தியாவில் விளையாட அரசு அனுமதி அளிக்கவில்லை. இந்த இடத்தில் டில்லி டேர்டெவில்ஸ் பங்கேற்கிறது

0 comments:

Post a Comment