எல்லோருக்கும் பிரச்னை தான்

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் நலனுக்காக மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உலகில் மற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சேர்த்து தான் போராடுகிறார்கள்,'' என, ஜாகிர் கான் தெரிவித்து உள்ளார். இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கான். சமீபத்தில் நடந்த முடிந்த ஐ.பி.எல்., தொடரில் தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஆண்டு முழுவதும் எந்த தொடரிலும் பங்கேற்க முடியாத நிலையில் உள்ளார். ஊக்கமருந்து ஒப்பந் தத்தில் கையெழுத்திட மறுக்கும் 11 வீரர்களில் இவரும் ஒருவர்.

இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, சானியா மிர்சா, ஒலிம்பிக் "தங்க மகன்' அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங் (குத்துச்சண்டை), சுசில் குமார் (மல்யுத்தம்) போன்ற வீரர்கள், புதிய ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தினர். முன்னணி டென்னிஸ் வீரர் நடால், வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்பு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்பு தயக்கத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து தான், கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜாகிர் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: விளையாட்டில் ஊக்கமருந்து இருக்க கூடாது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. போட்டியில் அதுவும் முக்கியம் என்பது எங்களுக்கு தெரியும். ஊக்கமருந்து சோதனையை நாங்கள் எப்போதும் எதிர்க்கவில்லை. அதில் உள்ள குறிப்பிட்ட ஒரு விதியை மட்டும் தான் எதிர்க்கிறோம். எந்த நேரமும் நாங்கள் சோதனைக்கு தயாராக உள்ளோம். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான் எங்கள் கவலை.

எல்லோருக்கும் பாதிப்பு: இந்திய வீரர்களின் எதிர்ப்பு அவர்களுக்காக மட்டுமல்ல. உலகத்தில் உள்ள அத்தனை விளையாட்டு வீரர்களும் இந்த விதியால் பாதிக்கபடத்தான் செய்வார்கள். அவர்களுக்காக நாங்கள் முதன்முதலாக குரல் கொடுத்ததால் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு பி.சி.சி.ஐ., யும் ஆதரவு தெரிவித்துள்ளது. அவர்கள் அறிவுரைப்படி தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். இவ்வாறு ஜாகிர் கான் தெரிவித்தார்.

ராஜ்யவர்தன் ஆதரவு : ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் வெள்ளி வென்ற ராஜ்யவர்தன் ரதோர், ஊக்கமருந்து ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,""பாதுகாப்பு மற்றும் அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்வதால் பிரச்னைகள் ஏற்படும் என்ற கிரிக்கெட் வீரர்களின் கருத்து சரிதான். அதனை அப்படியே ஒதுக்கிவிட முடியாது. ஆனால் பிபா போன்ற அமைப்புகள் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது பி.சி.சி.ஐ., போன்ற அமைப் பிற்கு இது தேவையில்லை,'' என்றார்.

இஷாந்த், நெஹ்ரா சாதிப்பார்கள் : ஜாகிர் கான் காயத்தின் காரணமாக இந்த ஆண்டு முழுவதிலும் எந்த தொடரிலும் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள் ளார். இந்நிலையில் தன்னால் ஏற்பட்ட வெற்றிடத்தை இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா நிரப்புவார்கள் என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இந்திய அணியில் பவுலிங் பிரிவில் ஆரோக்கியமான போட்டி உள்ளது. யார் அணிக்கு தேர்வு பெற்றாலும், பொறுப்பாக செயல்படுவார்கள் என்பது உறுதி. இந்திய அணி தொடரை வெல்ல அவர்கள் உதவுவார்கள். இஷாந்த் சிறப்பாக செயல்படுகிறார். பலமுறை காயமடைந்த நெஹ்ரா, நான்கு ஆண்டுகளுக்கு பின் சிறப்பான முறையில் மீண்டு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்துவார்கள்,'' என்றார்

0 comments:

Post a Comment