வருமா டெஸ்ட் உலககோப்பை?

டெஸ்ட் உலககோப்பை தொடரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), மெரில்போன் கிரிக்கெட் கிளப்புடன் (எம்.சி.சி.,) ஆலோசனை நடத்த உள்ளது. "டுவென்டி-20' போட்டிகளின் அசுர வளர்ச்சி, டெஸ்ட் போட்டிகளை வெகுவாக பாதித்துள்ளது. பாரம்பரியமிக்க டெஸ்ட் போட்டிகளை காப்பாற்ற ஐ.சி.சி., பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு விதிமுறைகளை புகுத்திய மெரில்போன் கிரிக்கெட் கிளப், இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது குறித்து அதன் தலைவர் டோனி லீவிஸ் கூறுகையில்,"" டுவென்டி-20' மற்றும் ஒரு நாள் போட்டிகளை போல டெஸ்ட் போட்டிகளுக்கும் உலககோப்பையை நடத்த ஆலோசித்து வருகிறோம். டெஸ்ட் போட்டிகள் பாரம்பரியமிக்கது. தற்போதுள்ள சூழ்நிலையில், இவற்றை பாதுகாப்பது அவசியம். அதற்கு ஒரு சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. வரும் நவம்பரில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்,'' என்றார்

0 comments:

Post a Comment