ஐ.சி.சி., குழுவில் அனில் கும்ளே

உலக ஊக்கமருந்து தடுப்பு மையம் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி. சி.ஐ.,) இடையிலான பிரச்னையை தீர்க்க, ஐந்து பேர் கொண்ட குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நியமித்துள்ளது. இக்குழுவில் முன்னாள் இந்திய கேப்டன் கும்ளே இடம் பெற்றுள்ளார்.ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எங்கே இருக்கிறோம் என்ற தகவல், மூன்று மாதங்களுக்கு முன்பே இத்தகவலை தெரிவித்தல், தவிர, போட்டிகள் இல்லாத நாட்களிலும் ஊக்கமருந்து பரிசோதனை என அடுக்கடுக்கான விதிமுறைகளை விதித்துள்ளது உலக ஊக்கமருந்து தடுப்பு மையம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத் திட மறுத்து வருகின்றனர். இவர் களுக்கு பி.சி.சி.ஐ.,யும் ஆதரவு தெரிவித்து வருகிறது. உலகின் மற்ற கிரிக்கெட் போர்டுகள் அனைத்தும் புதிய விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய வீரர்கள் மட்டும் ஒப்பந்தத் தில் கையெழுத்திட மறுத்து வருவது ஐ.சி.சி.,க்கு புதிய சிக்கலலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்க ஐந்து பேர் கொண்ட குழுவை ஐ.சி.சி., நியமித்துள்ளது. இவர்கள் இந்திய வீரர்கள் மற்றும் உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்திடம் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 பேர் குழு: இக்குழுவில் ஐ.சி.சி., ஊக்கமருந்து தடுப்பு குழு தலைவர் டிம் கெர், ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி ஹரூன் லார்கட், முன்னாள் இந்திய அணி கேப்டன் அனில் கும்ளே, பி.சி.சி.ஐ., செயலர் சீனிவாசன், ஐ.சி.சி.,யின் தலைமை ஆலோசகர் ஐ.எஸ்.பிந்திரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கும்ளே மகிழ்ச்சி: இக்குழுவில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் கும்ளே. இது குறித்து அவர் கூறுகையில்,"" ஊக்கமருந்து தடுப்பு மைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதில் இந்திய வீரர்களுக்கு உள்ள நடைமுறை சிக்கல் குறித்து இக்குழு விசாரணை நடத்தும். விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண முற்படுவோம்,'' என்றார்.

லார்கட் உறுதி: இந்திய வீரர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்கிறார் ஐ.சி.சி., தலைமை நிர்வாக அதிகாரி ஹரூன் லார்கட். இது குறித்து அவர் கூறுகையில்,"" இப்பிரச்னை குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உலக ஊக்கமருந்து தடுப்பு மைய நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.


பயப்பட வேண்டாம்:உலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் புதிய ஒப்பந்தத்தில் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத் திட வேண்டும் என இந்திய வில்வித்தை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைவர் விஜய் குமார் மல்கோத்ரா கூறுகையில்,"" உலகில் உள்ள அனைத்து விளையாட்டு கூட்டமைப்புகளும், ஒப்பந்தத்துக்கு கீழ்படிந்துள்ளன. இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுகிறது, பாதுகாப்பு பிரச்னை உருவாகிறது என இதுவரை எந்த வீரரும் தெரிவிக்க வில்லை. அதனால், இந்திய கிரிக்கெட் வீரர்களும் தகவல்களை தெரிவிக்க பயப்பட வேண்டாம்,'' என்றார்.

தப்பிக்க முடியாதுஉலக ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்துக்கு கட்டுப்பட்டாக வேண்டிய நிலையில் பி.சி.சி.ஐ., உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் சட்டத்திட்டங்களுக்கு கீழ்ப்படுவதாக பி.சி.சி.ஐ., ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம், இந்திய வீரர்களுக்கு சோதனை நடத்தினால் அதை தடுக்க யாராலும் முடியாது

0 comments:

Post a Comment