கோல்கட்டா அணியில் ஐ.சி.எல்., வீரர்கள்

முன்னாள் ஐ.சி.எல்., வீரர்களுக்கு கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது "டுவென்டி-20' தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 12 முதல் ஏப்ரல் 25ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இத்தொடரில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியும் பங்கேற் கிறது.

இத்தொடருக்கான கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் கடந்த ஐந்து நாட்களாக, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டனர். இதில் கங்குலி, அசோக் டிண்டா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கங்குலி கூறியதாவது: 3வது ஐ.பி.எல்., தொடரில், கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் விளையாட, முன்னாள் ஐ.சி.எல்., வீரர்களை சிலரை தேர்வு செய்ய உள்ளோம். மற்ற அணியினரும் முன்னாள் ஐ.சி.எல்., வீரர்களை தேர்வு செய் வார்கள் என நம்புகிறேன். ஐ.சி.எல்., அமைப்பில் விளையாடிய தீப் தாஸ்குப்தா உள்ளிட்ட சிறந்த பெங்கால் வீரர்களையும் தேர்வு செய்ய உள்ளோம்.

முன்னாள் பயிற்சியாளர் புக்கானன் கூறும் கருத்துகளுக்கு என்னால் பதில் கூற இயலாது. இது அவரது தனிப்பட்ட கருத்து. தற்போது மூன்றாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணி சிறப்பாக செயல்படுவது குறித்து மட்டும் ஆலோசித்து வருகிறேன். கடந்த இரண்டு தொடர்களில் கோல்கட்டா அணியின் செயல்பாடு குறித்து அதிகம் சிந்திக்க தேவையில்லை. இனிவரும் தொடர்களில் கோல்கட்டா அணி சிறப்பாக விளையாடும் என நம்புகிறேன்.

கோல்கட்டா அணிக்கு விரைவில் பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஆனால் யார் என்று தான் தெரியவில்லை. தற்போது பிசியோதெரபிஸ்ட் ஆன்ட்ரிவ் லிபஸ் முன்னிலையில் பயிற்சி முகாமில் பங் கேற்றோம். இம்முகாமில் சீனியர் வீரர் என்ற முறையில் இளம் வீரர்களுக்கு "டிப்ஸ்' வழங்கினேன்.

இந்த பயிற்சியில் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் மற்ற அணி வீரர்களான மனோஜ் திவாரி (டில்லி டேர்டெவில்ஸ்) மற்றும் ரனதேப் போஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) உள்ளிட்டோரின் காயம் குறித்து மட்டும் ஆய்வு செய்யப்பட்டது. இது இயற்கையான ஒன்றுதான். அந்நிய மண்ணில் சுற்றுப்பயணம் செய்யும் பொழுது எதிர் அணியின் பிசியோதெரபிஸ்ட்டிடம் ஆய்வு செய்துகொள்வது வழக்கம். இதில் ஒன்றும் தவறில்லை. இவ்வாறு கங்குலி கூறினார்

0 comments:

Post a Comment