தரவரிசையில் தோனி தொடர்ந்து முதலிடம்

சர்வதேச ஒருதின பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் தோனி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

ஒருதின பேட்ஸ்மேன்கள் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திங்கள்கிழமை வெளியிட்டது:

இதில் தோனி 828 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். 2-ம் இடத்துக்கு இந்தியாவின் யுவராஜ் சிங் முன்னேறியுள்ளார். அவர் 784 புள்ளிகளுடன் இருக்கிறார்.

3-ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹஸ்ஸியும், 4-ம் இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பாலும் உள்ளனர்.

வீரேந்திர சேவாக் 7-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 14-வது இடத்திலும், கெüதம் கம்பீர் 17-ம் இடத்திலும் உள்ளனர்.

அணி வரிசையில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 2-ம் இடத்தையும், ஆஸ்திரேலியா 3-ம் இடத்தையும் பெற்றுள்ளது.

பந்துவீச்சாளர் வரிசையில் இலங்கையின் குலசேகரா முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் ஜாகீர்கான் 16-ம் இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட்: டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 2-ம் இடத்திலிருந்த இந்தியாவின் கெüதம் கம்பீர் 3-ம் இடத்தில் தள்ளப்பட்டுள்ளார்.

முதலிடத்தில் இலங்கையின் குமார சங்ககராவும், 2-ம் இடத்தில் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்கும் உள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் 14-ம் இடத்திலும், விவிஎஸ் லஷ்மண் 17-ம் இடத்திலும், வீரேந்திர சேவாக 18-ம் இடத்தில் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின் முதலிடத்துக்கு வந்துள்ளார். இந்தியாவின் ஹர்பஜன்சிங் 5-ம் இடத்திலும், ஜாகீர்கான் 9-ம் இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்து வீச்சாளர்கள் தர வரிசையில் 20ம் இடத்தை பிடித்துள்ளார்

0 comments:

Post a Comment