ஐ.பி.எல். போட்டியில் ஆடியபோது ஷேவாக்குக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போது குணமடைந்து வருகிறார்.
இதனால் அவர் இலங்கையில் நடக்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி மற்றும் தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் சாம்பியன் கோப்பை போட்டிகளில் ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இது பற்றி கொல்கத்தாவில் கேப்டன் டோனியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
ஷேவாக் இப்போது வேகமாக குணமடைந்து உடல் தகுதி பெற்று வருகிறார். ஆனாலும் இலங்கை போட்டியில் அவர் ஆடமுடியாது.
சாம்பியன் கோப்பை போட்டி தொடங்குவதற்குள் அவர் முழு தகுதி பெற்று விடுவார். எனவே அந்த போட்டியில் உறுதியாக பங்கேற்பார்.
இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்கள்.
இலங்கை போட்டி தொடங்குவதற்கு முன்பு இடைக்கால உடல் தகுதி சோதனை நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
0 comments:
Post a Comment