ஐபிஎல் அணியை வாங்குகிறார் மோகன்லால்

ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளார்.

கொச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கேரள மாநில தட களத்தின் நல்லெண்ணத் தூதராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார்.

விழாவின் முடிவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தட கள விளையாட்டின் நல்லெண்ணத் தூதராக நியமித்து என்னை விளையாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நான் மல்யுத்த வீரன் என்பது பலருக்குத் தெரியாது.

நானும், இயக்குநர் பிரியதர்ஷனும் இணைந்து ஐபிஎல் அணியை வாங்கப் போவதாக செய்துள்ளன. அது உண்மைதான். ஏலத்தின் மூலம் ஐபிஎல் அணியை வாங்கப் போகிறேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ கிடைக்கும் என்றார் அவர்.

ஏற்கெனவே இந்தி நடிகர் ஷாருக் கான், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஐபிஎல் அணியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

17 ஆயிரம் ரன்களை எட்டுவாரா சச்சின்?

ஆஸ்திரேலியாவுடனான 3-வது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 17,000 ரன்களை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள சச்சின், மேலும் ஒரு சாதனையை எட்டவுள்ளார்.

ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில் அவர் 17,000 ரன்களை எடுக்க இன்னும் 79 ரன்கள் மட்டுமே தேவை. அவர் தற்போது 16,921 ரன்களைக் குவித்துள்ளார். இந்தப் போட்டியில் சச்சின் இந்த சாதனையைப் படைப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலாகவுள்ளனர்.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் தோனி கூறியதாவது:

ஒவ்வொரு முறை சச்சின் களத்தில் இறங்கும்போது அவர் அதிக ரன்கள் எடுக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்க்கின்றனர். அவர் ரன் எடுப்பதோடு தன்னோடு இணைந்து விளையாடும் வீரரையும் ரன் எடுக்க அவகாசம் தருவார்.

17 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லைத் தொடுவது என்பது சாதாரண விஷயமல்ல. இது ஒரு மறக்கமுடியாத நிகழ்ச்சியாக இருக்கும்.

கடந்த 2 போட்டிகளில் சச்சின் சரியாக விளையாடாவிட்டாலும், சச்சின்-சேவாக் ஜோடி சிறப்பானதாக அமைந்துள்ளது.

அணி வீரர்கள் பேட்டிங் வரிசையில் மாற்றம் இல்லை என்றார் அவர்

இந்தியாவுடன் மீண்டும் கிரிக்கெட்: யூனிஸ்கான் விருப்பம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டிகளைத் துவங்கவேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ்கான் கூறினார்.

கராச்சியில் வியாழக்கிழமை விளையாட்டு உபகரணங்கள் கடையைத் துவக்கிவைத்த பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே உடனடியாக இந்தியாவுடன், கிரிக்கெட் போட்டிகளைத் துவங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) அதிகாரிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஜாஸ் பட் சந்தித்துப் பேசவுள்ளார். இது ஒரு நல்ல அறிகுறி.

அவர் பாகிஸ்தான் திரும்பி வரும்போது இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல செய்தியைப் பெற்று வருவார் என எதிர்பார்க்கிறேன்.

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடும்போது அந்த நாட்டுடன் நல்ல நட்புறவு வளரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியாவுடன் கிரிக்கெட் தொடர் என்பதே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிதான். இதை எதனுடனும் ஒப்பிடமுடியாது என்றார் அவர்.

அம்பயர் டேவிட் ஷெப்பர்ட் மரணம்

கிரிக்கெட் அரங்கின் மிகச் சிறந்த அம்பயராக விளங்கிய டேவிட் ஷெப்பர்ட்(68) மரணம் அடைந்தார்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் டேவிட் ஷெப்பர்ட். கடந்த 1965ல் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், கிளவுசஸ்டர்ஷயர் கவுன்டி அணிக்காக விளையாடினார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 1979ல் விடைபெற்ற இவர், 1983ல் உலக கோப்பை போட்டியில் அம்பயராக அறிமுகமானார். தொடர்ந்து மூன்று உலக கோப்பை பைனல்களில்(1996, 1999, 2003) அம்பயராக பணியாற்றி சாதனை படைத்தார்.

கடந்த 2005ல் ஓய்வு பெற்ற இவர், 172 ஒரு நாள் மற்றும் 92 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார். களத்தில் வீரர்களுடன் சகஜமாக பழகும் இவர், மிகவும் ஜாலியான மனிதர். "ஷெப்' என செல்லமாக அழைக்கப்பட்ட இவர், சரியான தீர்ப்புகளை வழங்கி ரசிகர்களின் இதயம் கவர்ந்தவராக திகழ்ந்தார். கிரிக்கெட்டில் "111' என்ற ஸ்கோர் ராசியில்லாததாக கருதப்படும். இந்த ஸ்கோர் வரும் போதெல்லாம் தனது ஒரு காலை உயர்த்தி வித்தியாசமாக தாவுவது ஷெப்பர்ட்டின் வழக்கமாக இருந்தது.

கடந்த 2005ல் ஜமைக்காவில் தனது கடைசி டெஸ்டில் பங்கேற்றார் ஷெப்பர்ட். அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், இவரை கட்டி அணைத்து பிரியாவிடை கொடுத்தனர். பின்னர் லாரா,"" தங்களது சேவைக்கு நன்றி,'' என கையெழுத்திட்ட பேட் ஒன்றை இவருக்கு பரிசாக அளித்து கவுரவித்தார்.

நீண்ட நாட்களாக நுரையீரல் புற்று நோயால் அவதிப்பட்டு வந்த ஷெப்பர்ட் நேற்று முன் தினம் இரவு மரணமடைந்தார். இவருக்கு ஜெனி என்ற மனைவி உள்ளார். இவரது திடீர் மரணத்தால் கிரிக்கெட் உலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் தங்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர். சக நாட்டு அம்பயரான டிக்கி பேர்ட் கூறுகையில்,""ஷெப்பர்ட் எனது நல்ல நண்பர். இவரது மரணம் தனிப்பட்ட முறையில் மிகுந்த கவலை அளிக்கிறது. இவருடன் இணைந்து அம்பயராக பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,''என்றார்.

ஐ.சி.சி., இரங்கல்:
ஷெப்பர்ட் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) இரங்கல் தெரிவித்துள்ளது. ஐ.சி.சி., தலைவர் டேவிட் மார்கன் கூறுகையில்,""சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் அம்பயராக விளங்கினார் ஷெப்பர்ட். வீரர்கள், ரசிகர்கள், நிர்வாகிகள் என அனைவராலும் நேசிக்கப்பட்டார். அம்பயர் பணியை மிகவும் "சீரியசாக' எடுத்துக் கொண்டு சிறப்பாக செயல்பட்டார். இவரது மரணம் கிரிக்கெட்டுக்கு மிகப் பெரும் இழப்பு,''என்றார்

தோனிக்கு கில்கிறிஸ்ட் "அட்வைஸ்'

இந்திய கேப்டன் தோனி, "டாப்-ஆர்டரில்' பேட்டிங் செய்ய வேண்டும்,'' என ஆலோசனை அளித்துள்ளார் கில்கிறிஸ்ட்.

இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க, கேப்டன் தோனி மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும் என சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது:

இந்திய கேப்டன் தோனி அதிரடி ஆட்டக்காரர். ஒரு நாள் போட்டிகளில் அவர் டாப்-ஆர்டரில் களமிறங்குவது அணிக்கு பலம் அளிக்கும். மிகச் சிறந்த வீரரான அவர், அதிக ஓவர்கள் விளையாட வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புவர்.



யுவராஜ் பலம்:

வதோதராவில் நடந்த முதல் போட்டியில், காயம் காரணமாக யுவராஜ் பங்கேற்காதது இந்திய அணிக்கு துரதிருஷ்டம். ஆனால் இன்று நாக்பூரில் நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் யுவராஜ் களமிறங்குவார் என எதிர்பார்க்கிறேன். அவர் பங்கேற்பது இந்திய அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. உலகின் இரண்டு முன்னணி அணிகள் மோதும் இத்தொடரில் முன் கூட்டியே முடிவை நிர்ணயிக்க முடியாது.



தவறான முடிவு:

இந்திய தேர்வாளர்கள் ரோகித் சர்மாவை அணியில் இருந்து புறக்கணித்தது தவறான முடிவு. அவர் திறமையான வீரர். அணியில் வளர்ந்து வரும் வீரர்.



வழிகாட்டி:

கிரிக்கெட் வீரர்கள் அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு அதிக போட்டிகளில் பங்கேற்பதே காரணம் என கருதுகிறேன். ஆனால் ஆஸ்திரேலிய அணி இப்பிரச்னையில் மிகவும் எச்ரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாண்டிங், ஜான்சன் போன்ற வீரர்கள் இரண்டாவது ஐ.பி.எல்., தொடரை புறக்கணித்தனர். இது நல்ல முடிவு. மற்ற வீரர்களும் அதிக போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பதால், காயத்திலிருந்து தப்பிக்கலாம். இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்தார்.
--------------------


தோனி மறுப்பு

கில்கிறிஸ்ட் மற்றும் கங்குலியின் ஆலோசனைக்கு பதில் அளித்த தோனி கூறுகையில்,"" மூன்றாவது வீரராக எப்போதும் களமிறங்குவது என்பது முடியாத காரியம். சச்சின், சேவக் துவக்க வீரர்களாக விளையாடுகின்றனர். 3 வது வீரராக காம்பிர், 4 வது வீரராக யுவராஜ் உள்ளனர். 5 வது இடம் தான் காலியாக உள்ளது. பேட்டிங் ஆர்டரை நிரந்தரமாக நான் வைத்துக் கொள்வதில்லை. ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் பவுலர்களை அடிப்படையாக வைத்து தான் இதனை முடிவு செய்ய முடியும்,'' என்றார்.

இந்திய அணிக்கு கங்குலி "அட்வைஸ்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது குறித்து கங்குலி கூறியது: வதோதராவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி போராடி தான் தோல்வி அடைந்துள்ளது. ஒரு சில தவறுகளை திருத்திக் கொண்டால், நாக்பூரில் நாளை நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் சாதிக்கலாம்.

பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தும் நோக்கில், கேப்டன் தோனி 3 வது வீரராக களமிறங்குவது நல்லது. அதிரடியாக ஆடக் கூடிய தோனிக்கு, பேட்டிங் செய்ய அதிக ஓவர்கள் தேவை. அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எழுச்சியுடன் செயல்படுவது அவசியம்.

யுவராஜ் அணிக்கு திரும்பும் பட்சத்தில், ரவிந்திர ஜடேஜாவுக்குப் பதில் விராத் கோஹ்லியை தேர்வு செய்யலாம்.

முதல் போட்டியில் ஏமாற்றம் அளித்த சச்சின், நாக்பூரில் அசத்துவார் என எதிர்பார்க்கிறேன். ஹர்பஜன் சுழற் பந்து வீச்சில் அசத்தினால், எளிதில் வெற்றியை எட்டலாம். இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

200 விக்கெட், 1,000 ரன்கள்: ஹர்பஜன் சாதனை

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட் மற்றும் 1,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ஹர்பஜன் சிங் புரிந்தார்.

வதோதராவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் 1,000 ரன்களை ஹர்பஜன் எட்டினார். 200 விக்கெட்டுகளை அவர் முன்னதாகவே வீழ்த்தியிருந்தார்.

200 விக்கெட்டுகள், 1,000 ரன்கள் எடுக்கும் 3-வது இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்பஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இந்தச் சாதனையை கபில்தேவ், அஜித் வடேகர் ஆகியோர் செய்துள்ளனர்.

போட்டியில் பதிவான மற்ற சாதனைகள் வருமாறு:

இந்த ஆட்டத்தில் 73 ரன் குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஹசி ஒரு தின ஆட்டத்தில் தனது 25-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக தனது அதிகபட்ச ரன்களையும் அவர் எடுத்தார். இதற்கு முன் 2009, செப்டம்பர் 28-ல் செஞ்சுரியனில் நடந்த ஆட்டத்தில் அவர் இந்தியாவுக்கு எதிராக 67 ரன்கள் எடுத்திருந்தார்.

வீரேந்திர சேவாக் விக்கெட்டை எடுத்ததன் மூலம் இந்தியாவுக்கு எதிராக மட்டும் ஒரு நாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை பிரெட் லீ பெற்றார்.

இஷாந்த் சர்மா ஒரு நாள் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை (3வி-50) பதிவு செய்தார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் அவர் தனது 50-வது விக்கெட்டையும் எடுத்தார்.

ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் ஹோப்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்தார்.

கெüதம் கம்பீர் ஒரு நாள் ஆட்டத்தில் 17-வது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் முதல் அரை சதமாகும் இது. இதற்கு முன் 2008 பிப்ரவரியில் சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் 113 ரன்கள் எடுத்திருந்தார்.

ஒரு நாள் போட்டிகளில் பிரவீண்குமாரின் அதிகபட்ச (32 பந்துகளில் 40) ரன்னாகும் இது.

8-வது விக்கெட்டுக்கு ஹர்பஜன் - பிரவீண்குமார் சேர்ந்து எடுத்த 84 ரன்கள் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் 1987-ல் பெங்களூரில் கபில்தேவும் - கிரண் மோரேவும் கூட்டாக 82 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாகும்.

மைக்கேல் ஹசி ஒரு நாள் போட்டியில் 8-வது ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

வதோதராவில் இந்தியாவுக்கு எதிராக நடந்த 2 ஒரு தின ஆட்டங்களையும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது

2-வது போட்டியில் யுவராஜ் விளையாடுவார்'

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் யுவராஜ் சிங் விளையாடுவார் என்று இந்திய அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறினார்.

வதோதராவில் நிருபர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து விலகிய யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவுடனான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம்.

ஆனால் 2-வது ஒரு நாள் ஆட்டத்தில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்பதை உறுதியாக சொல்கிறேன் என்றார் அவர்.

முதல் ஒரு நாள் ஆட்டத்தில் பங்கேற்கும் 11 இந்திய அணி வீரர்களின் பெயர்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடர் 7 போட்டிகள் கொண்டதாக இருக்கிறது. முதலில் தோற்றாலும் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை எந்த அணி வேண்டுமானாலும் கைப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். வீரர்களுக்கு சிறு காயங்கள், பிரச்னைகள் இருந்தாலும் அவர்கள் சிறப்பாக விளையாடுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்

மீள்வதற்கு வாய்ப்புள்ளது: தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முதலில் பின்னடைவை சந்தித்தாலும், மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது,'' என தோனி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியது:

ஏழு போட்டிகள் கொண்ட தொடர் என்பதால் முதலில் சில ஆட்டங்களில் சரியாக விளையாடாவிட்டாலும், பின் மீண்டு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதேநேரம் 4 அல்லது 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் தோல்வியடைந்து விட்டால், தொடர் நம் கையை விட்டுப் போய்விடும்.

தீவிரமான பயிற்சியின் போது சிறு காயங்கள் ஏற்படுவது இயற்கைதான். இதனால் பயப்படத் தேவையில்லை. அனைத்து வீரர்களும் உடற்தகுதியுடன் உள்ளோம். ஆனால் அதிர்ஷ்டமில்லாத வீரர்கள் தான் குறுகிய இடைவெளியில் காயமடைகின்றனர்.

இதனால் தான் நாம் பகுதி நேர பந்து வீச்சாளர்களை நம்பவேண்டியுள்ளது. ஆடும் லெவனில் இடம் பெறும் வீரர்கள் குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் யுவராஜ் சிங்< இரண்டாவது போட்டியில் நிச்சயம் பங்கேற்பார்.

கடந்த டெஸ்ட் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் "ரிவர்ஸ் சுவிங்' செய்து அசத்தினர். சுழல் பந்து மற்றும் "பார்ட் டைம்' பவுலர்களும் விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால் ஒருநாள் போட்டி முற்றிலும் வித்தியாசமானது.

இந்த தொடரில் "ஆல் ரவுண்டர்கள்' தான் முக்கிய பங்கு வகிப்பார்கள். சிறந்த "ஆல் ரவுண்டர்கள்' இருந்தால், ஐந்து ஸ்பெஷல் பவுலர்களுடன் களமிறங்கலாம்.

சாம்பியன்ஸ் லீக் தொடரால் ஆஸ்திரேலிய வீரர்கள் நல்ல அனுபவம் பெற்றுள்ளனர். ஆனால் ஓயாத கிரிக்கெட்டால் அவர்கள் சோர்வடைந்தும் உள்ளனர். ரேங்கிங் குறித்து கவலைப்படாமல் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.

இவ்வாறு தோனி தெரிவித்தார்.

கிரிக்கெட்: டாஸ் வென்று ஆஸ்திரேலியா பேட்டிங்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வதோதராவில் தொடங்கியது. ஸ்கோர் விவரம்

டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. டிம் பைனியும், வாட்சனும் களம் இறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே நெஹ்ராவின் பந்துவீச்சில் வாட்சன் வெளியேறினார்.

அணி விவரம்:

இந்தியா: தோனி (கேப்டன்), வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, முனாப் படேல், ஆஷிஷ் நெஹ்ரா, பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, சுதீப் தியாகி, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா.

ஆஸ்திரேலியா: ரிக்கி பாண்டிங் (கேப்டன்), மைக்கேல் ஹசி, டெüக் போலிங்கர், நாதன் ஹாரிஸ், ஜான் ஹாலந்து, பென் ஹில்பெனாஸ், ஜேம்ஸ் ஹோப்ஸ், மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், டிம் பெய்ன், பீட்டர் சிடில், ஆடம் வோக்ஸ், ஷேன் வாட்சன், கேமரூன் ஒயிட்

இந்தியாவில் ஒரு தினத் தொடர்: உலகக் கோப்பைக்கான முன்னோட்டம்

தற்போதைய தொடர் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முன்னோட்டம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி 7 ஆட்டங்கள் கொண்ட ஒரு தினத் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களிடம் பாண்டிங் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தத் தொடர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானது. உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடர் இந்தியாவைப் பற்றி அறிய இளம் வீரர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இத் தொடரில் எந்த அளவுக்கு கற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவுக்கு இளம் வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் முன்னேற்றம் கண்டுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் சதம் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார்.

இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரிலும் அவர் சிறப்பாகப் பங்காற்றினார். தென் ஆப்பிரிக்காவின் ஜாக்ஸ் காலிஸ், இங்கிலாந்தின் ஆன்ட்ரூ ஃபிளின்டாஃப் ஆகியோர் அந்தந்த அணிகளுக்கு தூணாக விளங்குவதைப் போல வாட்சனும் உருவாகி வருகிறார் என்றார்

ஆஸ்திரேலியாவை வெல்வது கடினம்

ஆஸ்திரேலிய அணியை வெல்வதுதான் கடினம் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான் கூறினார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்க செல்லவுள்ளது.

இந்நிலையில் நிருபர்களுக்கு ஸ்வான் அளித்த பேட்டி:

கிரிக்கெட்டில் சிறந்த அணியாக ஆஸ்திரேலியா விளங்குகிறது. ஒவ்வொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீரருக்கும், ஆஸ்திரேலியாவை வீழ்த்துவதுதான் கனவாக இருக்கும்.

அந்த அணியை வெல்வது கடினம். இருப்பினும் கடந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வென்றோம் என்றார் அவர்.

இந்தியாவுக்கு "நம்பர்-1' வாய்ப்பு

சொந்த மண்ணில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் பட்சத்தில், உலகின் "நம்பர்-1' அணியாக முன்னேற இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடக்கிறது. முதல் போட்டி நாளை வதோதராவில் நடக்கிறது. தற்போது ஒரு நாள் ரேங்கிங் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்திய அணி (124 புள்ளிகள்), இத்தொடரில் ஆஸ்திரேலியாவில் (128 புள்ளிகள்) வீழ்த்தினால் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறலாம்.

"நம்பர்-1' வாய்ப்பு: ஒரு நாள் தொடரை 4-3 கணக்கில் இந்தியா கைப்பற்றினால் 127 புள்ளிகளை பெற்று முதலிடத்துக்கு முன்னேறும். ஆஸ்திரேலியா 126 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்படும்.

* 5-2 என தொடரை வென்றால் 129 புள்ளிகளும், 6-1 என தொடரை தன்வசப்படுத்தினால், 131 புள்ளிகளும் பெற்று இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றும். ஆஸ்திரேலியா 124 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெறும்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அப்படியே (7-0) வெல்லும் பட்சத்தில், இந்திய அணிக்கு 133 புள்ளிகள் கிடைக்கும். ஆஸ்திரேலியா 120 புள்ளிகளுடன் 3 வது இடத்துக்கு தள்ளப்படும்.

* தற்போது "நம்பர்-1' இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி, இத்தொடரை வென்றால் தனது இடத்தில் நீடிக்கும்.

இரண்டு முறை: இதற்கு முன் இந்திய அணி இந்த ஆண்டு இரண்டு முறை "நம்பர்-1' வாய்ப்பை பெற்றது. ஆனால் இந்த வாய்ப்பு நிரந்தரமாக நீடிக்க வில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சாதித்தால், முதலிடத்தில் சிறிது காலம் நீடிக்கலாம்

சேவாக், யுவராஜ் சிங் மும்பையில் தீவிர பயிற்சி

மும்பையில் நடைபெற்று வரும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பங்கேற்று தீவிர பயிற்சி செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் வதோதராவில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்காக இந்திய கிரிக்கெட் அணி மும்பை பாந்த்ரா-குர்லா வளாக மைதானத்தில் பயிற்சி பெற்று வருகிறது. காயத்தால் விலகி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ள சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் புதன்கிழமை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற வலைப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

சச்சின், பிரவீண்குமார், முனாப் படேல், ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், கேப்டன் தோனி ஆகியோரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

அரையிறுதியில் இன்று நியூசெüத்வேல்ஸ் - விக்டோரியா மோதல்

சாம்பியன்ஸ்லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசெüத் வேல்ஸ், விக்டோரியா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன.

சாம்பியன்ஸ்லீக் டி20 போட்டி கடந்த 8-ம் தேதி துவங்கியது. மொத்தம் 12 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இதில் இந்தியாவைச் சேர்ந்த டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளும் அடங்கும்.

ஆனால் சூப்பர் 8 பிரிவில் உள்ளூர் அணிகள் தோல்வியுற்று வெளியேறின. அரை இறுதிக்கு விக்டோரியா, நியூசெüத் வேல்ஸ், கேப் கோப்ராஸ், டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் முதல் அரை இறுதி ஆட்டம் புதன்கிழமை தில்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது. நியூசெüத் வேல்ஸ், விக்டோரியா அணிகள் முதல் அரை இறுதியில் களம் காணவுள்ளன.

இந்த 2 அணிகளுமே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சைமன் காடிச் தலைமையிலான நியூசெüத் வேல்ஸ் அணி தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்து வந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் மட்டுமே டிரினிடாட் அணியிடம் அந்த அணி தோல்வி கண்டது.

இருப்பினும் பேட்டிங், பெüலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அந்த அணி பலமானதாக உள்ளது. அதே நேரத்தில் நியூசெüத் வேல்ஸýக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல என்ற வகையில் விக்டோரியா அணி உள்ளது.

அணியின் கேப்டனாக கேமரூன் ஒயிட் உள்ளார். பேட்டிங் பெüலிங்கில் விக்டோரியா அணி சவால் விடும் வகையில் உள்ளது.

இந்த ஆட்டம் தில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. ஸ்டார் கிரிக்கெட் சானலில் போட்டி நேரடியாக ஒளிபரப்பாகிறது.

இந்திய மண்ணில் வெல்வது கடினம்

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில், அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது,'' என, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் தெரிவித்து உள்ளார்.

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் ஏழு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 25ம் தேதி வதோதராவில் நடக்க உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாண்டிங் கூறியது:

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோல்வியடையச் செய்வது என்பது எப்போதும் மிகவும் கடினம். வெளிநாட்டு தொடர்களின் போது விளையாடுவதை விட, தோனி தலைமையிலான இந்திய வீரர்கள், உள்ளூரில் உறுதியாக, சிறப்பாக விளையாடுவார்கள்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளதால், குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. நமக்கு எதிரான தொடருக்காக அணியில் பல மாற்றங்களை அவர்கள் செய்துள்ளார்கள்.


துரத்தும் காயம்:

அணியின் இளம் வீரர் பெர்குசன், நாதன் பிராக்கன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போய்விட்டது. துணைக்கேப்டன் மைக்கேல் கிளார்க்கும், காயம் குணமடைந்து தொடரின் பின்பகுதியில் தான் அணியில் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நானும், தேர்வுக்குழுவினரும் இணைந்து அடுத்த சில நாட்களில் பேட்டிங் ஆர்டர் குறித்து முடிவு செய்யஉள்ளோம்.



மார்ஷ் வருகை:

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு ஷான் மார்ஷ், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த "டாப்-ஆர்டர்' பேட்ஸ்மேனாக இருந்தார். டிம் பெய்னேவுடன் சேர்ந்து இப்போது ஷான் மார்சும் அணிக்கு திரும்புவதால், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

எப்படி இருப்பினும் ஆஸ்திரேலிய அணி சிறந்த பேட்டிங் வீரர்களை கொண்டுள்ளது. முதல் போட்டி துவங்கும் நாளன்று, எப்படியும் சரியான அணியுடன் களமிறங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு பாண்டிங் தெரிவித்தார்.



ஹர்பஜன் நம்பிக்கை:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் கூறியது:

மெக்ராத், வார்ன் மற்றும் ஹைடன் போன்ற சீனியர் வீரர்களின் ஓய்வுக்கு பின்பு ஆஸ்திரேலிய அணி, மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. அவர்கள் எப்போதும் கடினமானவர்கள்தான். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்தியாவில் வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையில் உள்ளனர்.

ஆனால் நமது அணி சிறப்பாக விளையாடுவதால் எந்த அணியையும், தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்.


ஆர்வம் வேண்டும்:

இந்திய அணியின் ஆடையை அணியும் போதெல்லாம், நான் விரைவில் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். பொதுவாக எந்தவித ஆர்வமும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் லட்சியங்களை அடைய முடியாது. இதில் நான் மிகுந்த ஆர்வமுள்ளவன். உலகின் சிறந்த அணிக்கு எதிராக அசத்தலான திறமையை வெளிப்படுத்த தயாராக உள்ளேன்.


வழிகாட்டியாக உள்ளேன்:

இளம் வீரர்கள் செய்யும் அனைத்து தவறுகளையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஏனெனில் நானும் ஆரம்பகாலங்களில் தவறுகள் செய்தவன் தான். என்னைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு சீனியர் வீரரும் பொறுப்பாக செயல்பட வேண்டும் என நினைப்பவன். நானும் அதைத்தான் செய்கிறேன்.

இவ்வாறு ஹர்பஜன் சிங் தெரிவித்தார்

2-வது சுற்றில் சானியா

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் விளையாட இந்தியாவின் சானியா மிர்சா தகுதி பெற்றுள்ளார்.

ஒசாகாவில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் இஸ்ரேல் வீராங்கனை ஷாகர் பீரை வீழ்த்தினார்.

மகளிர் இரட்டையர் ஆட்டங்களில் ஷாகர் பீருடன் இணைந்து சானியா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து 2-வது சுற்றில் உக்ரைனின் விக்டோரியாவை எதிர்த்து சானியா விளையாடவுள்ளார்

சேவாக், தினேஷ் அதிரடியில் டெல்லி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் குரூப் டி பிரிவில் வயாம்பா லெவன்ஸ் அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் வீழ்த்தியது.

முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வயாம்பா லெவன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வயாம்பா வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். ஜயவர்த்தனா மட்டும் நிலைத்து ஆடி 53 ரன்கள் சேர்த்தார்.

டெல்லியின் நானஸ் 4 விக்கெட்டுகளும், மெக்ராத் 2 விக்கெட்டுகளும், மிஸ்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக சேவாக் தேர்வு செய்யப்பட்டார்

யாருக்கு "சூப்பர்-8' வாய்ப்பு?

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ், இங்கிலாந்தின் சசக்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும் என்பதால், விறுவிறுப்பான போட்டியை காணலாம்.

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட ஏழு நாடுகளில் இருந்து, உள்ளூர் "டுவென்டி-20' அணிகள் பங்கேற்கின்றன. டில்லியில் இன்று நடக்கும் "பி' பிரிவு கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவின் ஈகிள்ஸ் அணி, இங்கிலாந்தின் சசக்ஸ் அணியை சந்திக்கிறது. இப்பிரிவில் இடம் பெற்றுள்ள மற்றொரு அணியான, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் அணி, இரண்டு லீக் போட்டியிலும் வெற்றி பெற்று, "சூப்பர்-8' சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. இந்நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, நியூ சவுத் வேல்ஸ் அணியுடன் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும்.

சாதிப்பாரா சாவ்லா?:
நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், சசக்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்த அணியில் பியுஸ் சாவ்லா, டுவைன் ஸ்மித், லுக் ரைட், யாசர் அராபத் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் இவர்கள் யாரும் பெரிய அளவில் சாதிக்காதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதில் இந்திய வீரர் பியுஸ் சாவ்லா ஒரு விக்கெட் கைப்பற்றி ஆறுதல் அளித்தார். ஆனால், பேட்டிங்கில் "டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். சொந்த மண்ணில் விளையாடும் இவர், இன்றைய போட்டியில் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கிறிஸ் நாஷ், ஹாமில்டன்-பிரவுன் என இளம் வீரர்கள் ஓரளவு கைகொடுத்ததால், கவுரவமான ஸ்கோரை பெற முடிந்தது. இன்றைய போட்டியில் சசக்ஸ் அணி பேட்டிங், பவுலிங்கில் முழுதிறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

கைகொடுப்பாரா வான் விக்?:
நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், ஈகிள்ஸ் அணியின் பேட்டிங், பவுலிங் படுமந்தமாக இருந்தது தோல்விக்கு முக்கியபங்கு வகித்தது. இந்த அணியில் மோர்னே வான் விக் மட்டும் ஓரளவு சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றவர். மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் முதல்தர போட்டியில் விளையாடி அனுபவம் பெற்றுள்ளனர். இருப்பினும் முதல் போட்டியில் வான் விக் "டக்-அவுட்டாகி' ஏமாற்றினார். இன்றைய போட்டியில் இவரது அனுபவம் கைகொடுத்தால் மட்டுமே, ஈகிள்ஸ் அணி அடுத்த சுற்றில் விளையாடுவது குறித்து யோசிக்க முடியும். ரியான் மெக்லாரன் முதல் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், இவருக்கு ஒத்துழைப்புதர வீரர்கள் இல்லாததால் தோல்வியடைய நேரிட்டது. இந்த அணியின் பந்துவீச்சு ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்றைய போட்டியில் ஈகிள்ஸ் அணியினர் அசத்தினால் மட்டுமே "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேற முடியும்.
இரு அணி வீரர்களும் வாழ்வா... சாவா... நிலையில் களமிறங்குவதால், அனல் பறக்கும் ஆட்டத்தை ரசிகர்கள் காணலாம்.

விக்டோரியா-வயம்பா பலப்பரீட்சை
புதுடில்லி: சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில், டில்லியில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் "டி' பிரிவில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் இலங்கையின் வயம்பா அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.
டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் வெற்றி கண்ட உற்சாகத்தில் விக்டோரியா அணி களமிறங்குகிறது. இந்த அணியில் காமிரான் ஒயிட், ஷேன் ஹார்வுட், பிராட் ஹாட்ஜே, டேவிட் ஹசி, பீட்டர் சிடில் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இன்றைய போட்டியிலும் விக்டோரியா அணியினர் பேட்டிங், பவுலிங்கில் அசத்தினால், இரண்டாவது வெற்றியை ருசிக்கலாம்.
வயம்பா அணி, டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து ஏமாற்றியது. இந்த அணியில் முபாரக், ஹெராத், மெண்டிஸ், ஜெயவர்தனா, மகரூப், உடவாட்டே, வான்டர்ட் உள்ளிட்ட சர்வதேச போட்டியில் விளையாடி அனுபவ வீரர்கள் உள்ளனர். இருப்பினும், முதல் போட்டியில் ஜெயவர்தனா மட்டும் அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். பவுலிங்கில் மெண்டிஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தி, நம்பிக்கை தந்தார். இன்றைய போட்டியில் அனுபவ வீரர்களுடன் இணைந்து இளம் வீரர்கள் கைகொடுத்தால் மட்டுமே, வெற்றி பெறமுடியும்.

யாருக்கு வாய்ப்பு:
"டி' பிரிவில் இடம் பெற்றுள்ள விக்டோரியா, டில்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றியை பதிவு செய்து இரண்டு புள்ளிகளுடன் உள்ளன. கடைசி போட்டியில் விளையாடும் வயம்பா அணி, வெற்றி பெறும் பட்சத்தில் மூன்று அணிகளும் தலா ஒரு வெற்றியுடன், 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகிக்கும். இந்நிலையில் "ரன்-ரேட்' அடிப்படையில் முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் "சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறும். வயம்பா அணியின் "ரன்-ரேட்' சற்று மோசமாக இருப்பதால், விக்டோரியா அணிக்கு எதிராக அபார வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

கடைசி பந்தில் டெக்கான் தோல்வி

சாம்பியன்ஸ் லீக் தொடரின் பரபரப்பான போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி கடைசி பந்தில் பரிதாபமாக வீழ்ந்தது. துணிச்சலாக போராடிய சாமர்சட் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று ஐதராபாத்தில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் ஐ.பி.எல்., நடப்பு சாம்பியனான இந்தியாவின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, இங்கிலாந்தின் சாமர்சட் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற சாமர்சட் அணி கேப்டன் ஜஸ்டின் லாங்கர், பீல்டிங் தேர்வு செய்தார்.

லட்சுமண் துவக்கம்:
டெக்கான் அணி சார்பில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் துவக்க வீரராக லட்சுமண் களமிறங்கினார். இவர், வில்லோபி வீசிய முதல் ஓவரில், இரண்டு பவுண்டரி அடித்து அசத்தினார். மறுபக்கம் கேப்டன் கில்கிறிஸ்ட் வழக்கம் போல் அதிரடி காட்டினார். வில்லோபி வீசிய அடுத்த ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இந்த நேரத்தில் தாமஸ் வீசிய பந்தில் கில்கிறிஸ்ட்(18) அவுட்டாக, ரன் வேகம் குறைந்து போனது. சுமன்(6) ஏமாற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சைமண்ட்ஸ்(8) சொதப்பினார். பொறுப்பாக ஆடிய லட்சுமண் 35 பந்தில் 46 ரன்களுக்கு(7 பவுண்டரி), டிரகோ பந்துவீச்சில் போல்டானார். கடைசி கட்டத்தில் ஸ்டைரிஸ்(13), வேணுகோபால் ராவ்(22) ஓரளவுக்கு கைகொடுத்தனர். "டெயிலெண்டர்கள்' சோபிக்க தவற, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது.

சவாலான இலக்கை விரட்டிய சாமர்சட் அணி, ஆர்.பி.சிங் வேகத்தில் ஆட்டம் கண்டது. முதலில் டிரஸ்கோதிக்கை(14) வெளியேற்றினார். பின்னர் 6வது ஓவரில் டி பிரியுன்(19), லாங்கரை(15) அவுட்டாக்கி இரட்டை "அடி' கொடுத்தார். ஓஜா சுழலில் கீஸ்வெட்டர்(5), சுப்பையா(19) வீழ்ந்தனர். சுமன் பந்துவீச்சில் டிரகோ(12), பிலிப்ஸ்(5) நடையை கட்டினர். இதையடுத்து 13.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

கடைசி ஓவர்:
இதற்கு பின் ஹில்டிரத், தாமஸ் இணைந்து மனம் தளராமல் போராடினர். கடைசி ஓவரில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கைவசம் 3 விக்கெட்டுகள் தான் இருந்தன. ஸ்டைரிஸ் பந்துவீசினார். முதல் பந்தில் ஹில்டிரத்(25) போல்டானார். அடுத்த பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் மேக்ஸ் வாலர்(0) அவுட்டாக, "டென்ஷன்' எகிறியது. 4வது பந்தில் தாமஸ் ஒரு பவுண்டரி அடித்தார். 5வது பந்தில் ரன் இல்லை. 6வது பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி அடித்த தாமஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். சாமர்சட் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தாமஸ் 17 பந்தில் 30 ரன்களுடன்(4 பவுண்டரி, 1 சிக்சர்) அவுட்டாகாமல் இருந்தார். இவரே ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இத்தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐ.பி.எல்., அணிகளான பெங்களூரு, டில்லி, டெக்கான் ஆகிய மூன்றும் முதல் போட்டியில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்துள்ளன

இளம் கிரிக்கெட் வீரர் சுட்டுக் கொலை

இளம் கிரிக்கெட் வீரர் ககன்தீப் சிங் (படம்) வெள்ளிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

மீரட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றுக்கு இரவு 11 மணி அளவில் ககன்தீப்பும், அவரது நண்பரும் சென்றுள்ளனர். அப்போது அந்த உணவு விடுதிக்கு வந்த ராகுல் என்பவர் தனது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளார்.

உணவு அளிப்பதில் தாமதம் ஏற்படவே உணவு விடுதியின் உரிமையாளர் ஷாநவாஸýடன் ராகுல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், ஷாநவாஸýம், இச்சம்பவத்துக்கு தொடர்பில்லாத ககன்தீப்பும் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக ராகுல் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இருவரைத் தேடி வருவதாகவும் ஐஜி ஜாவேத் அக்தர் தெரிவித்தார். ஜி.கே.நாயுடு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காகவே ககன்தீப் மீரட் வந்தார் என அவரது உறவினர் மகேந்திர சிங் தெரிவித்தார்.

"ஆஸ்திரேலியா சென்ற 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியில் ககன்தீப் இடம்பெற்றிருந்தார். வளர்ந்துவரும் இளம் வீரரை இழந்துவிட்டோம்' என மீரட் கிரிக்கெட் சங்கத் தலைவர் யுத்வீர் சிங் தெரிவித்தார்

"பாகிஸ்தான் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம்'

உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) கோரிக்கை விடுத்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2011-ல் இந்தியா, இலங்கை, வங்கதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானின் ஆட்டங்களை இந்தியாவில் நடத்தவேண்டாம் என்று ஐசிசி-யிடம் பிசிபி தலைவர் இஜாஸ் பட் கேட்டுக் கொண்டுள்ளதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விவகாரத்தில் அரசு என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு நடப்பது எங்களது கடமை என்று நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை இஜாஸ் பட் தெரிவித்தார்

காம்பிர் அணி பரிதாப தோல்வி!

சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காம்பிர் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணி, விக்டோரியன் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது.

உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற 12 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று டில்லியில் நடந்த "டி' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவின் டில்லி டேர்டெவில்ஸ், ஆஸ்திரேலியாவின் விக்டோரியன் புஷ்ரேஞ்சர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் காம்பிர், பேட்டிங் தேர்வு செய்தார்.

விக்கெட் மடமட:
ஹார்வுட் வீசிய முதல் ஓவரில் சேவக் இரண்டு பவுண்டரி விளாசினார். இதற்கு பின் டில்லி அணி தடுமாறியது. காம்பிர் 4 ரன்களுக்கு ஹார்வுட் "வேகத்தில்' வீழ்ந்தார். கிளின்ட் மெக்கே பந்தில் சேவக்(21) வெளியேறினார். ஓவேஸ் ஷா "டக்' அவுட்டானார். அவசரப்பட்ட தினேஷ் கார்த்திக்(6) ரன் அவுட்டானார். இதையடுத்து 8 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து தத்தளித்தது

மன்ஹாஸ் ஆறுதல்:
பின்னர் தில்ஷன், மன்ஹாஸ் இணைந்து அணியின் ஸ்கோரை நிதானமாக உயர்த்தினர். தில்ஷன் 18 ரன்கள் எடுத்தார். பொறுப்பாக ஆடிய மன்ஹாஸ் 25 ரன்களுக்கு, ஹார்வுட் பந்துவீச்சில் போல்டானார். "டெயிலெண்டர்களும்' ஏமாற்ற, டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 98 ரன்கள் மட்டும் எடுத்தது.
விக்டோரியன் சார்பில் அபாரமாக பந்துவீசிய மெக்கே 3 விக்கெட் வீழ்த்தினார்.

குயினி அசத்தல்:
சுலப இலக்கை விரட்டிய விக்டோரியன் அணிக்கு குயினி "சூப்பர்' துவக்கம் தந்தார். ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்த போதும், நெஹ்ரா, நான்ஸ் உள்ளிட்ட டில்லி அணி பவுலர்கள் ஏமாற்றினர். அதிரடியாக ஆடிய குயினி, சிக்சர் மழை பொழிந்தார். இவர் 40 ரன்களுக்கு(4 பவுண்டரி, 3 சிக்சர்) அமித் மிஸ்ரா சுழலில் வெளியேறினார். ஹாட்ஜ்(9), டேவிட் ஹசி(7) ஏமாற்றினர். பின்னர் அசத்தலாக ஆடிய ஒயிட்(22*), பிலிஜார்ட்(15) இணைந்து வெற்றியை உறுதி செய்தனர். பாட்டியா பந்தில் பிலிஜார்ட் ஒரு இமாலய சிக்சர் அடிக்க, விக்டோரியன் அணி 16.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பந்துவீச்சில் கலக்கிய மெக்கே ஆட்ட நாயகன் விருதை
தட்டிச் சென்றார்.

-------
ஸ்கோர் போர்டு

டில்லி டேர்டெவில்ஸ்

காம்பிர்(ப)ஹார்வுட் 4(8)
சேவக்(கே)+(ப)மெக்கே 21(15)
தில்ஷன்(ப)மெக்கே 18(26)
ஓவேஸ் ஷா(கே)வேட்(ப)மெக்கே 0(5)
கார்த்திக்-ரன் அவுட்-(ஒயிட்) 6(7)
மன்ஹாஸ்(ப)ஹார்வுட் 25(34)
பாட்டியா(ப)மெக்டொனால்டு 8(9)
மிஸ்ரா-அவுட் இல்லை- 7(14)
சங்வான்(ப)மெக்டொனால்டு 1(2)
உதிரிகள் 8
மொத்தம்(20 ஓவரில் 8 விக்.,) 98
விக்கெட் வீழ்ச்சி: 1-17(காம்பிர்), 2-31(சேவக்), 3-41(ஓவேஸ் ஷா), 4-47(கார்த்திக்), 5-76(தில்ஷன்), 6-84(மன்ஹாஸ்), 7-96(பாட்டியா), 8-98(சங்வான்).
பந்துவீச்சு: ஹார்வுட் 4-0-20-2, சிடில் 4-0-21-0, மெக்கே 4-0-17-3, மெக்டொனால்டு 4-0-17-2, ஹாலந்து 3-0-10-0, டேவிட் ஹசி 1-0-9-0.

விக்டோரியன் அணி
குயினி(ப)மிஸ்ரா 40(33)
ஹாட்ஜ்(ப)தில்ஷன் 9(16)
ஒயிட்-அவுட் இல்லை- 22(23)
டேவிட் ஹசி(ப)பாட்டியா 7(13)
பிலிஜார்ட்-அவுட் இல்லை- 15(16)
உதிரிகள் 7
மொத்தம்(16.4 ஓவரில் 3 விக்.,) 100
விக்கெட் வீழ்ச்சி: 1-55(குயினி), 2-55(ஹாட்ஜ்), 3-78(டேவிட் ஹசி).
பந்துவீச்சு: நெஹ்ரா 3-0-20-0, நான்ஸ் 3-0-17-0, மிஸ்ரா 4-0-30-1, தில்ஷன் 4-0-14-1, பாட்டியா 2.4-0-18-1

தோனி அணிக்கு "திரில்' வெற்றி

சாலஞ்சர் டிராபி தொடரின் முதல் போட்டியில், தோனி தலைமையிலான இந்தியா "புளூ' அணி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது.

உள்ளூர் என்.கே.பி., சால்வி சாலஞ்சர் டிராபி கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நேற்று துவங்கியது. இதில், இந்தியா புளூ, ரெட், கிரீன் என மூன்று அணிகள் மோதுகின்றன. நேற்று நடந்த போட்டியில், பத்ரிநாத் தலைமையிலான இந்திய "ரெட்' அணி, தோனி தலைமையிலான இந்திய "புளூ' அணியுடன் மோதியது. டாஸ் ஜெயித்த இந்தியா "ரெட்' அணி, பேட்டிங் தேர்வு செய்தது.


அதிரடி துவக்கம்:

இந்தியா "ரெட்' அணிக்கு தவான், முரளி விஜய் துவக்கம் தந்தனர். இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. 4 பவுண்டரி 2 சிக்சர் விளாசிய விஜய், 44 ரன்களுக்கு அவுட்டானார். தவான் (39) ஆறுதல் அளித்தார். கேப்டன் பத்ரிநாத் (4) ஏமாற்றினார்.


ஜாக்கி அரை சதம்:

பின்னர் கடிவாலே, ஜாக்கி இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடிவாலே (55), அரை சதம் கடந்து பெவிலியன் திரும்பினார். ஜாக்கி, 54 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா (22), சஹா (1), அஸ்வின் (11), இஷாந்த் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 44.4 ஓவரில் ஆல்-அவுட்டான இந்தியா "ரெட்' அணி 248 ரன்கள் எடுத்தது.


குமார் அசத்தல்:

எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்தியா "புளூ' அணி, நமன் ஓஜா (8) விக்கெட்டை விரைவில் இழந்தது. ஜாபர் (27), ஹர்பஜன் (36) ஆறுதல் அளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி, சுரேஷ் குமார் ஜோடி பொறுப்புடன் ஆடியது. தோனி 37 ரன்கள் சேர்த்தார். நிதானமாக ஆடிய குமார் அரை சதம் கடந்தார். இவர் 87 ரன்கள் அடித்து அசத்தினார்.

யூசுப் பதான் (15), ஸ்ரீசாந்த் (0) சொதப்பினர். பரபரப்பான இறுதி கட்டத்தில், டின்டா (8*), திரிவேதி (4*) கைகொடுத்தனர். இந்திய "புளூ' அணி 49.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 250 ரன்கள் எடுத்து, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் "திரில்' வெற்றி பெற்றது. இவ்வெற்றியின் மூலம் 4 புள்ளிகள் பெற்றது.
--------------------------


ஸ்கோர் போர்டு

இந்தியா "ரெட்'

தவான் (கே) ஓஜா (ப) திரிவேதி 39 (39)
விஜய் (கே) ஓஜா (ப) ஹர்பஜன் 44 (35)
கடிவாலே (கே) ஜாதவ் (ப) டின்டா 55 (51)
பத்ரிநாத் ரன் அவுட் (திரிவேதி) 4 (10)
ஜாக்கி (கே) ஓஜா (ப) யூசுப் 54 (51)
ஜடேஜா எல்.பி.டபிள்யு.,(ப) ஹர்பஜன் 22 (38)
சஹா (கே) யூசுப் (ப) தோனி 1 (9)
அஸ்வின் (கே) குமார் (ப) டின்டா 11 (20)
முனாப் (ப) ஹர்பஜன் 7 (13)
இஷாந்த் (கே) ஓஜா (ப) டின்டா 1 (3)
தியாகி -அவுட் இல்லை- 0 (0)
உதிரிகள் 10
மொத்தம் (44.4 ஓவரில் ஆல்-அவுட்) 248

விக்கெட் வீழ்ச்சி: 1-79 (விஜய்), 2-99 (தவான்), 3-118 (பத்ரிநாத்), 4-167 (கடிவாலே), 5-212 (ஜாக்கி), 6-218 (சஹா), 7-231 (ஜடேஜா), 8-242 (அஸ்வின்), 9-244 (இஷாந்த்), 10-248 (முனாப்).
பந்து வீச்சு: ஸ்ரீசாந்த் 7-1-44-0, டின்டா 8-0-52-3, ஹர்பஜன் 8.4-0-40-3, யூசுப் 8-1-42-1, திரிவேதி 8-0-43-1, சக்சேனா 2-0-12-0, தோனி 3-0-14-1.


இந்தியா "புளூ'

ஓஜா (கே) ஜாக்கி (ப) இஷாந்த் 8 (16)
ஜாபர் (கே) தவான் (ப) தியாகி 27 (33)
ஹர்பஜன் (ப) ஜடேஜா 36 (36)
ஜாதவ் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 1 (8)
சுரேஷ் குமார் (கே) ஜடேஜா (ப) இஷாந்த் 87 (113)
தோனி (கே) அஸ்வின் (ப) இஷாந்த் 37 (40)
சக்சேனா (கே) கடிவாலே (ப) அஸ்வின் 15 (22)
யூசுப் (கே) விஜய் (ப) ஜடேஜா 15 (15)
ஸ்ரீசாந்த் (ப) முனாப் 0 (2)
டின்டா -அவுட் இல்லை- 8 (7)
திரிவேதி -அவுட் இல்லை- 4 (6)
உதிரிகள் 12
மொத்தம் (49.3 ஓவரில் 9 விக்கெட்) 250
விக்கெட் வீழ்ச்சி: 1-31 (ஓஜா), 2-48 (ஜாபர்), 3-49 (ஜாதவ்), 4-106 (ஹர்பஜன்), 5-161 (தோனி), 6-192 (சக்சேனா), 7-226 (யூசுப்), 8-237 (சுரேஷ் குமார்), 9-237 (ஸ்ரீசாந்த்).
பந்து வீச்சு: முனாப் 9.3-0-58-1, தியாகி 8-0-49-1, இஷாந்த் 10-1-56-4, ஜடேஜா 10-0-36-1, அஸ்வின் 10-2-33-1, பத்ரிநாத் 2-0-9-0.
---------


அபராதம்

ராஞ்சி: பதிவு செய்யப்படாத காரை ஓட்டிச் சென்ற இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனிக்கு, ரூ. 100 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கோடி மதிப்பிலான "ஹம்மர்-ஹெச் 2' காரை வாங்கினார் தோனி. ஆனால் அதை இதுவரை பதிவு செய்ய வில்லை. சாலஞ்சர் டிராபி தொடரில் பங்கேற்க நேற்று முன்தினம் ராஞ்சியிலிருந்து, நாக்பூர் வந்தார். அப்போது பதிவு செய்யப்படாத தோனியின் காரை மாநில போக்குவரத்து துறை, மடக்கி அபராதம் விதித்தது.