இந்தியா சாம்பியன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இளம் வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை பெற்றது இந்தியக் குழு.

பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ரன்களைக் குவித்தது.

விராட் கோலியின் சிறப்பான ஆட்டம், இந்த அளவிலான எண்ணிக்கை உயர்வுக்கு முக்கியக் காரணமாகியது. அவர் 102 பந்துகளில் 104 ரன்களைக் குவித்தார். விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா 59 பந்துகளில் 74 ரன்களைச் சேர்த்து உறுதுணையளித்தார். சற்றுக் கடினமான இலக்குடன் அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 46.2 ஓவர்களில் 266 ரன்களைச் சேர்த்து தோல்வியுற்றது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹென்ரி டேவிட்ஸ் அதிகபட்சமாக 82 ரன்ரகளைச் சேர்த்தார்.

சுதீப் தியாகி 72 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். இத் தோல்விக்கு முன்னர் தென் ஆப்பிரிக்கா தொடர்ந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கோலி சிறப்பு: இந்திய வீரர் விராட் கோலி, இப் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சிறப்பை பெற்றார். 7 போட்டிகளில் 398 ரன்களைச் சேர்த்தார். அதில் 2 சதங்களும் அடங்கும்.

அதே போன்று பந்துவீச்சில் இந்திய வீரர் சுதீப் தியாகி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரானார். 6 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளைப் பெற்றார்

0 comments:

Post a Comment