இந்தியா வெற்றி

உலக ஜூனியர்ஸ்குவாஷ் குழு போட்டிகள் சென்னையில் உள்ள தமிழக ஸ்குவாஷ் ராக்கெட் சங்க அரங்கில் நேற்று தொடங்கி, வரும் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில், நேற்று நடந்த போட்டியில், இந்திய அணி, ஜெர்மனி அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

உலக ஸ்குவாஷ் குழு போட்டிகள், நேற்று சென்னையில் தொடங் கின. இதில் நேற்று நடந்த முதல் போட்டியில், இந்திய அணி, ஜெர்மனி அணியை சந்தித்தது.இந்திய அணி சார்பில் தீபிகா பலிக்கல், அன்வேஷா ரெட்டி மற்றும் சுரபி மிஸ்ரா விளையாடினர். ஜெர்மனி அணி சார்பில், லிசா மாரி செட்மியர், கரோலின் சாயே மற்றும் ஸ்டெப்னீ ரூஸ்னர் விளையாடினர். இந்தப் போட்டியில் இந்தியாவின் தீபிகா பலிக்கல், ஜெர்மனியின் லிசா மாரி செட்மியரை 11-4, 11-3, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றார். அன்வேஷா ரெட்டி, கரோலின் சாயேயை 11-9, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். சுரபி மிஸ்ரா, ஸ்டெப்னீ ரூஸ்னரை 11-6, 11-1, 11-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். மற்ற குழு போட்டிகளில் எகிப்து, நியுசிலாந்து, இங்கிலாந்து, மலேசியா, ஹாங்காங், அமெரிக்கா, கனடா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன

0 comments:

Post a Comment