இந்திய வீரர்கள் அறையில் நடந்தது என்ன?


தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பின்பும், மிகவும் சோர்வான முகத்துடன், ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அமைதியாக, கனத்த இதயத்துடன் வீரர்கள் இறுக்கமாக இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் நடக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு, பெரிதும் நம்பிக்கையுடன் சென்ற இந்திய அணி, வழக்கம் போல அரையிறுதிக்கு செல்லாமல் வெளியேறியது. 

கடைசி போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக வென்ற போதும், வீரர்கள் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளனர். 

இப்போட்டி முடிந்ததும், "டிரசிங் ரூமில்' அவரவர் இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒருவருக்கு ஒருவர் பேசாமல், தோள் மீது கூட கை வைக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டு இருந்தனர். அரைமணி நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. 

பயிற்சியாளர் பிளட்சர் வந்து, ஆறுதல் கூறிய பின் தான் சற்று நிம்மதி அடைந்தனராம். வீரர்களிடம் பிளட்சர் கூறியது:

இப்போது என்ன நடந்திருச்சி, ஒன்னுமே நடக்கலே. ஐந்து போட்டியில் நான்கில் வென்றோம். ஆனால் நமக்கு அதிர்ஷ்டம் இல்லை, அவ்வளவு தான். உங்கள் அனைவருக்கும் நன்றி. முக்கியமாக மனோஜ் திவாரிக்கும் நன்றி. 

இத்தொடரில் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை என்றாலும், 12வது வீரர் பணியை சிறப்பாக செய்தார். இதேபோல, பல போட்டிகளில் களமிறங்காத ஹர்பஜனும் நன்கு திறமை வெளிப்படுத்தினார். அடுத்த தொடரை புத்துணர்ச்சியுடன் துவங்குவோம்.

இவ்வாறு பிளட்சர் பேசினார். 

இதன் பின் ரூமில் இருந்து முதல் ஆளாக சோகத்துடன் வெளியேறினார் விராத் கோஹ்லி. அடுத்து ஒவ்வொரு வீரராக வாடிய முகத்துடன், உற்சாகமின்றி பிரேமதாசா மைதானத்தை விட்டு கிளம்பினர். 

பயிற்சியாளர் பிளட்சர், அங்கிருந்து நேரடியாக தென் ஆப்ரிக்கா செல்ல திட்டமிட்டார். இருப்பினும், இவருக்கான விமான டிக்கெட் கிடைப்பதில் இழுபறியாகவே இருந்தது.

0 comments:

Post a Comment