இலங்கையில் 3 நாடுகள் கிரிக்கெட் ஷேவாக் ஆடவில்லை

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்தர் ஷேவாக். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

உடல் தகுதி இல்லாமலே அவர் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றார். பின்னர் போட்டி நடைபெறும் சமயத்தில் அவர் நீக்கப்பட்டார். வெஸ்ட்இண்டீஸ் தொடரிலும் அவர் இடம் பெறவில்லை.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக செப்டம்பர் 17-ந் தேதி வரை அவர் ஓய்வில் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கையில் செப்டம்பர் 8-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் 3 நாடுகள் போட்டியிலும் ஷேவாக் ஆடமாட்டார். 3-வது நாடாக நியூசிலாந்து பங்கேற்கிறது.

இதே போல செப்டம்பர் 22-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் சாம்பியன் டிராபி போட்டியிலும் அவர் விளையாடுவது சந்தேகமே.

இந்திய அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீரரான ஜாகீர்கான் இந்த ஆண்டு முழுவதும் ஆடமாட்டார். தோள்பட்டை காயத்துக்காக அவர் தென்ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் ஆபரேசன் செய்து கொண்டார்.

காயம் குணமடைய வெகு நாட்கள் ஆகும் என்பதால் அவர் இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டி, சாம்பியன் டிராபி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர் ஆகிய 4 தொடர்களில் விளையாட மாட்டார்.


இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் போட்டி மற்றும் சாம்பியன் போட்டிக்கான இந்திய அணி வருகிற 16-ந் தேதி அறிவிக்கப்படும்.

0 comments:

Post a Comment