இந்திய தொடர்: ஸ்மித் நம்பிக்கை

இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனுபவ வீரர்கள் கைகொடுப்பார்கள்,'' என, தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் கிரீம் ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்மித் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி இன்று இந்தியா வருகிறது. இங்கு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் பிப்., 6ல் நாக்பூரில் துவங்கவுள்ளது.

அதற்கு முன்னதாக பிப்., 2 ம் தேதி துவங்கும் தென் ஆப்ரிக்க அணி, இந்தியன் போர்டு பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

சமீபத்தில் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் விலகினார்.

பின் தேர்வுக்குழு அதிரடியாக கலைக்கப்பட்டது. இந்த பிரச்னைகளை கருத்தில் கொள்ளாமல், தங்களது அணி இந்தியாவில் சாதிக்கும் என கேப்டன் ஸ்மித், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும் அணிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆனால் எங்கள் வீரர்கள் இந்தியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர். இம்முறையும் சிறப்பான ஆடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

சிக்கலான நேரங்களில், அசத்தலாக செயல்பட்டு எப்படி மீண்டு வருவது என்பது குறித்து கடந்த சில ஆண்டுகளாக நன்கு அறிந்துள்ளனர். இந்த அனுபவத்துடன் அணியில் உள்ள சீனியர் வீரர்கள், இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவுவார்கள்.

பயிற்சியாளர் ராஜினாமா, தேர்வுக்குழு கலைப்பு என கடந்த வாரம் முழுவதும் பரபரப்பான சம்பவங்கள் நடந்தது. அவற்றை எல்லாம் மறந்து இந்தியாவில் சாதிப்போம் என நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு ஸ்மித் கூறினார்.

சிறந்த அணி:

இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணிக்கு தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள வான் ஜில் கூறுகையில்,"" இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இதை வெல்வதற்கு தேவையான அளவில் வீரர்களை தயார்படுத்துவோம்,'' என்றார்.

தென் ஆப்ரிக்காவை வீழ்த்த கபில் "ஐடியா'

இந்திய அணியின் பலம் சுழற்பந்துவீச்சு தான். இதற்கேற்ப தென் ஆப்ரிக்க டெஸ்ட் தொடரின் போது ஆடுகளங்கள் அமைக்கப்பட வேண்டும், '' என, கபில் தேவ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதுகுறித்து இந்திய "ஜாம்பவான்' கபில் தேவ் கூறியது:

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவை பொறுத்தவரை ஜாகிர் கான் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். அவரைத் தவிர, போட்டிகளில் சாதிக்கக்கூடிய அளவில் வேறு யாரும் இல்லை. இஷாந்த் சர்மாவின் பலமே அவரது "இன்ஸ்விங்' பவுலிங் தான்.

இதை பேட்ஸ்மேன்கள் எளிதாக தெரிந்து கொள்வதால் தான், அவரால் சாதிக்க முடியவில்லை. போட்டிகளில் சிறப்பாக செயல்பட, இஷாந்த் சர்மா புதிய வழிகளை காண வேண்டும். ஒருவேளை இவரால் முடியாத பட்சத்தில் அணிக்கு, ஏமாற்றமாகிவிடும்.


சுழலுக்கு சாதகம்:

ஆனால் நமது அணியுடன் ஒப்பிடுகையில் தென் ஆப்ரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறமை வாய்ந்தவர்கள். நமது பலம், சுழற் பந்து வீச்சு தான். இதனால் வரவிருக்கும் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய அணி விளையாட வேண்டும். இவ்வாறு கபில் தேவ் தெரிவித்தார்.


திறமை உள்ளது:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்டு ஹாட்லி கூறியது:

இந்திய அணியை பொறுத்தவரையில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களால் சரியான நேரத்தில் விக்கெட்டை வீழ்த்தி போட்டிகளை வென்று தரமுடியும். டெஸ்ட், ஒருநாள் அல்லது "டுவென்டி-20' என போட்டிக்கு தகுந்து விரைவில் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். இதுபோன்று உடனடியாக மாறுவது, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கடினம்.


சிறப்பான நிர்வாகம்:

ஆனால் லேசாக சோர்ந்து விடுவது, காயமடைவது, விரைவில் இளைத்துவிடுவது போன்ற காரணங்களால் பார்மை இழந்து விடுகிறார்கள். ஒருசில போட்டிகளில் பங்கேற்காவிட்டாலும், அடுத்து டெஸ்ட் போட்டிக்கு தகுந்து, புத்துணர்ச்சியுடன் வர வேண்டும். இந்த வீரர்களை சரியாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு ரிச்சர்டு ஹாட்லி கூறினார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெனிஸ் லில்லி கூறுகையில்,"" சில வீரர்கள் புதிதாக அறிமுகமாகும் போது எதிர்பார்ப்புக்கு மாறாக சிறப்பாக செயல்படுகிறார்கள். பின் படிப்படியாக ஏமாற்றம் தருகிறார்கள். ஜாகிர் கான், மெக்ராத் போன்றவர்கள் நீண்ட காலம் சாதிக்கின்றனர்.

அதிகப்படியான போட்டிகளில் பங்கேற்பது தான் இதற்கு காரணம். இதனால் சில போட்டிகளில் மகிழ்ச்சி, சில ஆட்டங்களில் ஏமாற்றம் கிடைக்கும். இந்த ஏமாற்றத்தை அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாமல் போவதால் "பார்ம்' இழக்கிறார்கள்,'' என்றார்.

2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி தென் ஆப்பிரிக்க அணி நாளை வருகை

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

இதற்காக தென் ஆப்பிரிக்க அணி நாளை (31-ந்தேதி) இந்தியா வருகிறது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் மும்பை வந்து இறங்குகிறார்கள்.அங்கிருந்து நாக்பூர் செல்கிறது. அங்கு இந்திய போர்டு தலைவர் லெவனுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் (பிப்ரவரி 2 மற்றும் 3-ந்தேதி) விளையாடுகிறது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. அதை தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடை பெறுகிறது.

தென் ஆப்பிரிக்க அணி முதலில் இந்தியாவுடன் 5 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி என சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் தென் ஆப்பிரிக்க அணி வருமாறு:-

கிரேமி சுமித் (கேப்டன்), காசிம் அம்லா, டிவில்லியர்ஸ், டுமினி, காலிஸ், மார்க் பவுச்சர், ஜான் போத்தா, பால் ஹாரிஸ், மெக்லரன், மோர்னே மார்கல், பர்னல், பீட்டர்சன், ஆஸ்வெல் பிரின்ஸ், ஸ்டெய்ன், சோட் சோபே.

தேர்வு எழுத தோனிக்கு சலுகை

இந்திய அணி கேப்டன் தோனி, தனது பி.காம்.,பரீட்சையை, அவர் விரும்பும் தேர்வு மையத்தில் எழுதலாம்,'' என, கல்லு<õரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி, கடந்த 2008 ல் ராஞ்சியில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் பி.காம்., சேர்ந்தார். பின் கிரிக்கெட் போட்டிகளால் அவரால் படிப்பை தொடர முடியவில்லை. தற்போது பி.காம்., தேர்வுகளை எழுத, தோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லு<õரி டீன் டாக்டர் ஜெயந்த் சின்கா கூறியது:

கடந்த ஒரு மாதத்துக்கு முன், தோனியிடம் பேசினேன். அவர் பி.காம்., தேர்வுகளை எழுத ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் அவருக்குள்ள "பிசியான' கிரிக்கெட் அட்டவணையில், கல்லூரிக்கு வந்து தேர்வெழுத முடியாத நிலை உள்ளது.

அவர் விருப்பப்பட்டால், வேறு மையங்களில், தேர்வெழுத ஏற்பாடு செய்து தரப்படும். ஒருவேளை கல்லூரிக்கு வெளியே வேறு நகரத்தில் தேர்வெழுத விரும்பினால், அதையும் பரிசீலனை செய்ய நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு சின்கா கூறினார்.


தேர்வு எழுதுவாரா?

வரும் பிப்ரவரியில் தென் ஆப்ரிக்க தொடர், அடுத்து மூன்றாவது ஐ.பி.எல்., தொடர், பின் வெஸ்ட் இண்டீசில் உலக கோப்பை "டுவென்டி-20' என வரிசையாக கிரிக்கெட் தொடர் உள்ள நிலையில், இந்த ஆண்டும் தோனி தேர்வு எழுதுவது சந்தேகம்.

4-வது ஐ.பி.எல். போட்டியில் 500 வீரர்களை ஏலம்விட திட்டம்

3-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற மார்ச் மாதம் தொடங்கி நடக்க உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் வீரர்களை 3 ஆண்டுகளுக்கு மட்டுமே ஏலம் விட்டு இருந்தனர். இந்த போட்டியுடன் வீரர்கள் ஏல ஒப்பந்த காலம் முடிகிறது.

எனவே அடுத்த ஆண்டு நடக்கும் 4-வது ஐ.பி.எல். போட்டிக்கு வீரர்கள் புதிதாக ஏலம் விடப்பட உள்ளனர்.

இந்த ஏலம் வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதில் மொத்தம் 500 வீரர்கள் வரை ஏலம் விடப்பட உள்ளனர். இது உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு வீரர் ஏலமாக இருக்கும்.

தற்போது அணிகள் தங்களிடம் வைத்திருக்கும் வீரர்களில் இந்தியர் 4 பேர், வெளிநாட்டினர் 2 பேரை மீண்டும் வைத்து கொள்ளலாம். மற்றவர்களை ஏலம் மூலம் எடுக்க வேண்டும்.

தற்போது ஒரு அணியின் ஒட்டுமொத்த வீரர்கள் எண்ணிக்கையில் 10 பேர் மட்டுமே வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். இது 12 ஆக உயர்த்தப்படுகிறது. ஆனால் 11 பேர் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்ற விதி தொடர்ந்து நீடிக்கும்.

தற்போது 8 அணிகள் உள்ளன. இது 10 அணிகளாக உயர்த்தப்படுகிறது. அணிகள் அதிகரிப்பதால் போட்டிகளும் அதிகரிக்கப்படுகின்றன.

இப்போது 60 போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் எண்ணிக்கை 94 ஆக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் ஆட வேண்டும். ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் 14 போட்டிகளில் ஆடலாம்.

மாலையில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. இனி காலையிலும் போட்டிகள் நடத்தப்படும்.

இந்தியாவுக்கு வங்கதேசம் பதிலடி

மிர்புர் டெஸ்டில் தமிம் இக்பால் சதமடித்து அசத்த, இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது வங்கதேசம்.


வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 233 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 2 ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 459 ரன்கள் எடுத்திருந்தது.


தோனி அரை சதம்: நேற்று 3 ம் நாள் ஆட்டம் நடந்தது. பொறுப்புடன் ஆடிய இந்திய கேப்டன் தோனி, அரை சதம் கடந்தார். இவர் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். இந்திய "டெயிலெண்டர்களான' ஜாகிர் (0), இஷாந்த் (13) சோபிக்க தவறினர்.

133 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 544 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் முதல் இன்னிங்சை "டிக்ளேர்' செய்தது. இதன் மூலம் 311 ரன்கள் முன்னிலை பெற்றது.


தமிம் அதிரடி: இரண்டாவது இன்னிங்சை ஆடிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் நல்ல துவக்கம் தந்தார். இம்ருல் (5) ஏமாற்றினார். அடுத்து வந்த சித்திக், இக்பாலுடன் இணைந்து பொறுப்புடன் ஆடினார். டெஸ்ட் அரங்கில் 2 வது சதம் கடந்தார் தமிம் இக்பால்.

சித்திக் (55), அரை சதம் கடந்து அவுட்டானார். 18 பவுண்டரி 3 சிக்சருடன் 151 ரன்கள் குவித்த தமிம் இக்பால், ஜாகிர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். தமிம் இக்பால், சித்திக் ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 200 ரன்கள் சேர்த்து அசத்தியது.


நேற்றைய 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்தது. அஷ்ரபுல் (2), சகாதத் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

சச்சினுக்கு நோட்டீஸ்

சச்சின் வாங்கிய காருக்கு வரி செலுத்தாததால், நவி மும்பை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மும்பையில் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் புதிய வாகனங்களை பதிவு செய்பவர்கள் முறையாக வரி செலுத்துவதில்லை. இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,"" இதுவரை வாகனங்களுக்கான பதிவு வரியாக, சுமார் 50 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்படாமல் உள்ளது.

இதுகுறித்து கடந்த 15 நாட்களுக்கு முன், மத்திய நிதித்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டு இருந்தது,'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.


பட்டியலில் சச்சின்:

இதையடுத்து கட்டப்படாமல் உள்ள வரியை வசூலிக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து வரி கட்டாதவர்கள் விபரத்தை பெற்று அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் பெயரும் இடம் பெற்றுள்ளது எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி <உள்ளது.


சொகுசு கார்:

சமீபத்தில் இவர் வாங்கிய பி.எம்.டபிள்யு.எம் 5 என்ற சொகுசுக் காரை, நவி மும்பை பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதற்கான ஒரு லட்ச ரூபாய் வரியை இவர் செலுத்தாமல் இருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

கடந்த கடைசி காலாண்டில் (2009 அக்.,-டிச.,) மட்டும் ஒன்றரை கோடி ரூபாய் வருமான வரி செலுத்தியுள்ள சச்சின், ஒரு லட்ச ரூபாய் கட்டணத்தை செலுத்தாதது வியப்பாக உள்ளது.

இதுகுறித்து நவி மும்பை மாநகராட்சி துணை கமிஷனர் (வரி) மகாவீர் பெந்தாரி கூறுகையில்,"" நவி மும்பை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கார் பதிவு செய்த பலர், இன்னும் அதற்குரிய வரி செலுத்தாமல் இருந்தனர்.

அவர்களது முகவரியை வாங்கி, முறைப்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதில் கிரிக்கெட் வீரர் சச்சினும், தனது காருக்கு ஒரு லட்ச ரூபாய் வரி செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது,'' என்றார்.

கிரிக்கெட்டின் "காந்தி'

கிரிக்கெட்டின் காந்தி என்று அழைக்கப்படுபவர் மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் சர் ஃபிராங்க் மார்டைமர் மேக்லின் வோரல்.

1924-ல் பார்படோஸ் தீவிலுள்ள பிரிட்ஜ்டவுனில் பிறந்தார் ஃபிராங்க் வோரல். மேற்கிந்தியத் தீவு மக்களுக்குப் பிடித்தமான விளையாட்டு வோரலுக்கும் பிடித்ததில் ஆச்சர்யமில்லைதான்.

ஆனால் இவர் கிரிக்கெட் விளையாடியது 5 வயது முதலே என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தேசிய அணியில் அவர் தனது 23-வது வயதில்தான் இடம்பிடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிராக 1947-48-ல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். அபாரமாக விளையாடியபோதும் சதத்துக்கு அருகில் வந்து ஆட்டமிழந்தார். ஆனால் அதே தொடரின் 2-வது டெஸ்டில் சிறப்பாக விளையாடி 131 ரன்கள் குவித்தார்.

மொத்தம் 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,860 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 49.48. இதில் 9 சதங்களும் அடங்கும். அதிகபட்சம் 261. மேலும் 69 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். சிறப்பான பந்துவீச்சு 7வி-70.

நடுவரிசை ஆட்டக்காரரான ஃபிராங்க் வோரலின் ஆட்டத்திறன் சிறப்பானது. ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன் என்ற அனைத்து வர்ணனையாளர்களாலும் புகழப்படுபவர் அவர். தனது இடதுகை மிக வேகப்பந்துவீச்சால் எதிரணி வீரர்களை மிரட்டி வந்தார்.

1951-ல் விஸ்டன் சிறத்த கிரிக்கெட் வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். கிரிக்கெட் சேவைக்காக அவருக்கு 1964-ல் சர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் மேற்கிந்தியத் தீவு அணிக்கு முதன்முதலாக கேப்டன் பொறுப்பேற்ற கருப்பர் என்ற பெருமையையும் வோரல் பெற்றார்.

1960 முதல் 1963 வரை அவர் 15 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். அப்போது அந்த நாட்டிலுள்ள பல்வேறு தீவுகளைச் சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைந்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.

1965-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 1967-ல் நோய்வாய்ப்பட்டு அவர் இறந்தார். இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மேற்கிந்தியத் தீவு பல்கலைக்கழக மானியக் குழுவில் கெüரவ உறுப்பினராக இடம்பெற்று இந்தியாவுக்கு வந்து சென்றார்.

அவரது நினைவாக மேற்கிந்தியத் தீவுகள்-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர்களில் ஃபிராங்க் வோரல் கோப்பை வழங்கப்படுகிறது

தொடரை கைப்பற்ற இந்தியா "ரெடி

இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மிர்புரில் துவங்குகிறது. காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் தோனி களமிறங்குவதால், இந்திய அணி உற்சாகத்துடன் காணப்படுகிறது.

சச்சின், காம்பிர் உள்ளிட்ட வீரர்கள் "சூப்பர் பார்மில்' இருப்பதால், இப்போட்டியில் வென்று, தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்ற காத்திருக்கிறது.

வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சிட்டகாங்கில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று மிர்புரில் உள்ள ஷெர்-இ-பங்களா மைதானத்தில் துவங்குகிறது.


தேறுவாரா யுவராஜ்:

இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் பலமாக உள்ளது. சிட்டகாங் டெஸ்டில் சதம் அடித்த சச்சின், காம்பிர் மீண்டும் அசத்தலாம். துணை கேப்டன் சேவக் மிகப் பெரும் இலக்கை எட்ட வேண்டும். கடந்த போட்டியில் ஏமாற்றிய டிராவிட், இம்முறை சாதிக்க வாய்ப்பு உண்டு. காயம் காரணமாக லட்சுமண் இல்லாதது பின்னடைவு.

முதுகு வலியில் இருந்து மீண்ட கேப்டன் தோனி, அணிக்கு திரும்புவது நல்ல விஷயம். தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், முரளி விஜய் இடையே போட்டி காணப்படுகிறது. இந்த மைதானத்தில் 2007ல் சதம் அடித்தவர் என்ற அடிப்படையில் தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெறலாம். கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும்(12, 25 ரன்) சொதப்பிய யுவராஜ், இம்முறை திறமையை நிரூபிக்க வேண்டும்.


ஸ்ரீசாந்த் "அவுட்':

பந்துவீச்சில் ஜாகிர் கான், இஷாந்த் சர்மா நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்கள் முதல் டெஸ்டில் தலா 5 விக்கெட் வீழ்த்தினர். காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்பஜன் சுழலில் கலக்க காத்திருக்கிறார். இவருடன் இணைந்து அமித் மிஸ்ரா மிரட்டலாம். தொடைப் பகுதியில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக ஸ்ரீசாந்த், நாடு திரும்புகிறார். கடந்த போட்டியில் இவர் பெரிதாக சாதிக்காததால், அணிக்கு பாதிப்பு இல்லை.


வங்கதேசம் வளர்ச்சி:

டெஸ்ட் அரங்கில் வங்கதேசம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகிறது. கடந்த போட்டியில் இந்திய அணிக்கு கடும் சவால் கொடுத்தது. முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தி காட்டினர். இதே போல இரண்டாவது இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தனர்.

முஷ்பிகுர் ரஹிம் சதம் கடந்து அசத்தினார். தமிம் இக்பால் பொறுப்பாக பேட் செய்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்ரபுல், நபீஸ் தான் ஏமாற்றினர். இவர்கள் மிர்புரில் திறமை காட்டலாம். கேப்டன் சாகிப் அல் ஹசன் சுழலில் அசத்துகிறார்.

கடந்த போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றினார். இதே போல வேகத்தில் கலக்கிய சகாதத் ஹுசைன் 6 விக்கெட் வீழ்த்தினார். இவர்களது சூப்பர் பந்துவீச்சு தொடர்ந்தால், இந்தியாவுக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கலாம்.


பேட் செய்யலாம்:

சிட்டகாங் டெஸ்டில் பனிப்பொழிவு, மூடுபனி, காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. மிர்புரில் வானிலை சீராக இருக்கும் என்பதால், போட்டிக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். இந்தியா, டாஸ் வென்றால் முதலில் பேட் செய்வது சிறந்தது

ஐபிஎல் ஏலம்: பாகிஸ்தான் அமைச்சர் பாய்ச்சல்

ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட எடுக்கப்படாதது அவமரியாதையான செயல் என பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் அஜாஸ் ஹுசைன் ஜக்ரானி கூறினார்.

இது குறித்து ஜக்ரானி கூறியதாவது: பாகிஸ்தான் வீரர்கள் நியாயமில்லாமலும், பாரபட்சமான முறையிலும் நடத்தப்பட்டது தொடர்பாக இந்திய விளையாட்டுத் துறை அமைச்சரிடம் பேசியுள்ளேன். டுவென்டி20 உலக சாம்பியனான பாகிஸ்தான் அணிக்கு இழைக்கப்பட்ட அவமானம் இது என்றார்.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஜாஸ் பட் கூறியதாவது: இதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கடந்த ஆண்டு கூடத்தான் எங்கள் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை என்றார்.

பாகிஸ்தான் வீரர்களின் பங்கேற்பு குறித்து யாரும் உறுதி கூற முடியாத நிலையில் எப்படி கோடிக்கணக்கான ரூபாயை செலவழிக்க முடியும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஷில்பா ஷெட்டி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து 5-வது சதம் சாதனைக்காக ஆடவில்லை

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் கவுதம் காம்பீர். வங்காள தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் 116 ரன்கள் எடுத்தார். டெஸ்ட் போட்டியில் காம்பீர் தொடர்ந்து அடித்த 5-வது சதம் ஆகும்.

நியூசிலாந்துக்கு எதிராக 137 மற்றும் 167 ரன்னும், இலங்கைக்கு எதிராக 114 மற்றும் 167 ரன்னும் எடுத்தார்.

இதன் மூலம் அவர் காலிஸ், முகமது யூசுப் சாதனையை சமன் செய்தார். இன்னும் ஒரு சதத்தை தொடர்ந்து அடித்தால் அவர் பிராட்மேன் (தொடர்ந்து 6 சதம்) சாதனையை சமன் செய்வார்.

இந்த நிலையில் தான் சாதனைக்காக விளையாடவில்லை என்று காம்பீர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தொடக்க காலங்களில் 50 ரன்களுக்கு மேல்தான் எடுப்பேன். ஷேவாக்கின் ஆலோசனை எனக்கு சதங்கள் அடிக்க உதவியாக இருந்தது. இன்னும் ஒரு சதம் அடித்தால் பிராட்மேன் சாதனையை சமன் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நான் அதை மனதில் கொள்ளவில்லை. சாதனைக்காக ஆடவில்லை. சிறப்பாக விளையாடி அணிக்கு ரன் சேர்ப்பது தான் முக்கியம்.

இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்

ஐ.பி.எல்., ஏலத்தில் "ஜாக்பாட்'

ஐ.பி.எல்., ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ஷேன் பாண்ட், வெஸ்ட் இண்டீசின் போலார்டுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இருவரும் அதிகபட்சமாக தலா 3.43 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டனர். அப்ரிதி உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை
இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) சார்பில் மூன்றாவது கட்ட "டுவென்டி-20' தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப்., 25 ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நேற்று மும்பையில் நடந்தது.

ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி தலைமையில் நடந்த ஏலத்தில் நீடா அம்பானி (மும்பை இந்தியன்ஸ்), விஜய் மல்லையா (ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு), பிரித்தி ஜிந்தா (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), ஷில்பா ஷெட்டி (ராஜஸ்தான் ராயல்ஸ்), தவிர, கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டில்லி டேர்டெவில்ஸ் அணிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

67 பேர் பங்கேற்பு: வீரர்களின் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளிட்ட 11 அணிகளை சேர்ந்த 66 வீரர்கள் வாய்ப்பு பெற்றிருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராப் குயினே ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டாதால் மொத்தம் 13 இடங்களுக்கு மட்டும் வீரர்கள் ஏலம் நடந்தது.

புதிய முறை: ஏலத்தில் எடுக்கப்படும் வீரர்கள் இந்த ஆண்டு தொடரில் மட்டும் தான் பங்கேற்க முடியும். இதனால் கடந்த ஆண்டு பிளின்டாப்பிற்கு 7.5 கோடி கொடுத்ததை போல அதிக தொகை கொடுக்க இம்முறை எந்த நிர்வாகமும் முன்வரவில்லை.

முதல் சுற்று ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர்' போலார்டை (22) வாங்குவதற்கு சென்னை, மும்பை, பஞ்சாப் மற்றும் டெக்கான் அணிகள் இடையே பலத்த போட்டி காணப்பட்டது. இறுதியில் நான்கு அணிகளும் சம தொகைக்கு ஏலம் கேட்டதால், "சைலன்ட் டை-பிரேக்கர்' முறை பயன்படுத்தப்பட்டது. இதில் போலார்டை, 3.43 கோடி கொடுத்து மும்பை அணி தட்டிச் சென்றது.

பாண்ட்டுக்கு போட்டி: அடுத்து நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் பாண்ட்டை ஏலத்தில் எடுக்க கோல்கட்டா, டெக்கான் அணிகள் இடையே போட்டி இருந்தது. இருவரும் சம தொகைக்கு ஏலம் கேட்க, "சைலன்ட் டை-பிரேக்கர்' முறையில் பாண்ட்(3.43 கோடி), கோல்கட்டா அணியால் விலைக்கு வாங்கப்பட்டார். இந்த ஆண்டு ஏலத்தில் போலார்டு, பாண்ட் இருவரும் அதிக தொகைக்கு வாங்கப்பட்டனர்.

3வது இடத்தில் ரோச்: இதற்கு அடுத்து வெஸ்ட் இண்டீசின் கீமர் ரோச்சை, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 3 கோடியே 30 லட்சத்துக்கு வாங்கியது. பின் டில்லி அணி, தென் ஆப்ரிக்க வீரர் பார்னலை (2.80 கோடி) ஏலத்தில் எடுத்தது. தவிர, முகமது கைப், அப்துல்லா (பஞ்சாப்), மார்கன் (பெங்களூரு), மார்டின், வோஜஸ் (ராஜஸ்தான்), கெம்ப், பெரேரா (சென்னை) வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

இந்திய இளம் வீரர்கள் (19வயதுக்குட்பட்டோர்) அசோக் மேனரியா, ஹர்மீட் சிங், ஹர்சால் படேல் மூவரும் மும்பை, டெக்கான், பெங்களூரு அணிகளால் தலா 8 லட்சத்துக்கு வாங்கப்பட்டனர்.

பரிதாப பாக்.,: இந்த ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நிலைதான் பரிதாபமாக இருந்தது. "டுவென்டி-20' அணியின் கேப்டன் அப்ரிதியை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வராதது ஆச்சர்யமாக இருந்தது. இதேபோல் கம்ரான் அக்மல், உமர் குல், தன்வீர் என 11 வீரர்களில் யாரும் விலை போகவில்லை. ஆஸ்திரேலியாவின் 11 வீரர்களில் இருவர் மட்டுமே தேர்வு பெற்றனர்.

வங்காளதேச டெஸ்ட் : தெண்டுல்கர் 44-வது சதம்

இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது.

முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 63 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச் சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தெண்டுல்கர் 76 ரன்களுடனும் இஷாந்த்சர்மா 1 ரன்னுடனும் இருந்தனர்.

இன்று காலை 9.00 மணிக்கு போட்டி தொடங்க வேண்டும். ஆனால் பனி மூட்டத்தால் மைதானம் சரியாக தெரியவில்லை. எனவே போட்டி 1 1/2 மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது.

76 ரன்களுடன் இருந்த தெண்டுல்கர் சதம் அடிக்கும் நோக்கத்துடன் நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார். அதற்கு உதவும் வகையில் இஷாந்த் சர்மா தனது விக்கெட்டை இழக்காமல் காப்பாற்றி ஆட்டத்தை தொடர்ந்தார்.

அடித்து ஆடினால் விக்கெட் பறிபோய் விடலாம் என கருதியதால் இஷாந்த் சர்மா பந்தை லேசாக தட்டிவிட்டு மறுமுனைக்கு ஓட தெண்டுல்கர் மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல் லாம் அடித்து ஆடினார். 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் தெண்டுல்கர் 93 ரன்களை எட்டி இருந்தபோது இஷாந்த் சர்மா அவுட் ஆனார்.

அடுத்து தெண்டுல்கருடன் ஸ்ரீசாந்த் ஜோடி சேர்ந்தார். ஸ்ரீசாந்த் ஒரு ரன் மட்டும் எடுத்து மறுமுனைக்கு வந்தார். தெண்டுல்கர் அந்த பந்தை சந்தித்து பவுண்டரி அடித்து 97 ரன்னுக்கு முன்னேறினார். அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விளாசி சதத்தை கடந்தார்.

இது தெண்டுல்கரின் 44-வது சதம் ஆகும். அவர் 160 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி, 2 சிக்சருடன் சதத்தை எட்டினார். அடுத்து மேலும் சில பந்துகளை சந்தித்த தெண்டுல்கர் ஒரு பவுண்டரி மூலம் 105 ரன்களை எட்டினார். அப்போது ஸ்ரீசாந்த் அவுட் ஆனார்.

இந்தியா 70.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்து இருந்தது. தெண்டுல்கர் 105 ரன்களுடன் கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.

இந்திய வீரர்கள் சீட்டு கட்டுகள் போல சரிந்த நிலையில் 4-வது வீரராக களம் இறங்கிய தெண்டுல்கர் கடைசி வரை தாக்குபிடித்து சதம் அடித்ததுடன் இந்திய அணி 243 ரன்கள் எடுக்கவும் உதவினார்.

பின்னர் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் ஆடியது. மதியம் 1 மணி நிலவரப்படி விக்கெட் இழப்பின்றி 39 ரன்கள் எடுத்து இருந்தது. அதன்பின் வங்காளதேசம் 59 ரன் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அத்துடன் மோதிய வெளிச்சம் இல்லாமையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது