பர்மிங்காமில் நடைபெற்றுவரும் ஆஷஸ் தொடரின் 3-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவை எதிர்நோக்கியிருந்தது.
113 ரன்கள் பின்னடைவுடன் ஞாயிற்றுக்கிழமை 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 4-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களைச் சேர்த்திருந்தது.
இதனால் திங்கள்கிழமை நடைபெறும் கடைசி நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை பெற்றிருந்தது. ஆனால் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் ஆக்ரோஷத்தை ஹசி (64 ரன்), மைக்கேல் கிளார்க், நார்த் ஆகியோர் முறியடித்தனர்.
தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட்டுகளை இழந்து 293 ரன்களைச் சேர்த்திருந்தது அணி. கிளார்க் 73 ரன்களுடனும், நார்த் 64 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இதனால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை டிராவில் முடித்துக் கொள்ளும் நிலை இருந்தது.
முன்னதாக இங்கிலாந்து அணி 376 ரன்களைச் சேர்த்து முதல் இன்னிங்ûஸ இழந்தது. ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களைச் சேர்த்தது.
0 comments:
Post a Comment