பல்டி அடித்தார் யூசுப் பதான் கிரிக்கெட் சபையை புகழ்கிறார்

இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) சிறப்பாக செயல்படுவதாக யூசுப் பதான் திடீரென பாராட்டியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்கவிருக்கும் உத்தேச இந்திய அணியில் இர்பான் பதான் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து யூசுப் பதான் தனது ஆட்சேபத்தை தெரிவித்தார். பின் தான் எந்தக் கருத்தும் கூறவில்லை என பல்டி அடித்தார்.

இந்நிலையில் யூசுப் பதான் பி.சி.சி.ஐ. யை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது;

சாம்பியன்ஸ் கிண்ண உத்தேச அணியில் எனது சகோதரர் இர்பான் இடம்பெறாததற்கு காரணம் தெரியவில்லை. எங்களது வேலை போட்டிகளில் விளையாடுவது மட்டும் தான். அணியில் யார் இடம்பெறுவது என்பது குறித்தெல்லாம் பேசுவது தவறு. இந்திய அணிக்காக பங்கேற்று விளையாடி வரும் நிலையில், தேசத்தின் கிரிக்கெட் குறித்து கருத்து தெரிவிக்க உரிமையில்லை.

நான் முன் சொன்னதாக வெளியான தகவல்கள் குறித்து பி.சி.சி.ஐ. விளக்க கடிதம் எதுவும் எழுதினேனா என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், நான் தேர்வாளர்களை பற்றி விமர்சிக்கவே இல்லை. இந்திய அணிக்காக பங்கேற்கும் நாங்கள் பொறுப்பானவர்கள் என பி.சி.சி.ஐ. க்கு தெரியும். எங்களுக்காக பி.சி.சி.ஐ. பொறுப்பெடுத்து சிறப்பாக செயல்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. உண்மையில் எனக்கு இது மகிழ்ச்சியாக உள்ளதென்றார்

0 comments:

Post a Comment