ஒருநாள் கிரிக்கெட் அரங்கில், ஒரு இன்னிங் சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வரின் (194 ரன்) உலக சாதனையை, சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று சமன் செய்தார், ஜிம்பாப்வே வீரர் சார்லஸ் கவன்ட்ரி. வங்கதேச அணிக்கு எதிராக நேற்று நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் கவன்ட்ரி இச்சாதனை படைத்தார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொட ரில் பங்கேற்கிறது. மூன்று போட்டியின் முடிவில் வங்கதேச அணி 2-1 என தொடரில் முன்னிலை வகித்தது. நேற்று 4வது போட்டி நடந்தது.
கவன்ட்ரி சாதனை: முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணிக்கு சார்லஸ் கவன்ட்ரி நம்பிக்கை அளித் தார். வங்கதேச பந்து வீச்சை வெளுத்து வாங்கிய இவர், ஒருநாள் அரங்கில் முதல் சதம் கடந்தார். வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய கவன்ட்ரி 156 பந்தில் 7 சிக்சர், 16 பவுண்டரி உட்பட 194 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன் மூலம் இவர், ஒரு நாள் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை பாகிஸ் தானின் சயீத் அன்வருடன் (1997, எதிர் - இந்தியா, இடம்: சென்னை ) பகிர்ந்து கொண்டார்.
தமிம் இக்பால் அசத்தல்: கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு, தமிம் இக்பால் (154) கைகொடுத் தார். வங்கதேச அணி 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப் புக்கு 313 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் வங்கதேச அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. தவிர, அந்நிய மண்ணில் தொடர்ந்து 2வது முறை யாக ஒருநாள் தொடரை வென்று சாதித்தது. முன்ன தாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை வென்றது வங்கதேசம்.
0 comments:
Post a Comment