அப்டியே "ஷாக்காயிட்டேன்'

ஐந்து ஆண்டுகள் ஒப்பந்தம் இருந்தும், மூன்று ஆண்டுகளில் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கியது மிகுந்த அதிர்ச்சி அளித்தது,'' என, கோல்கட்டா அணியின் முன்னாள் பயிற்சியாளர் புக்கானன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான பயிற்சியாளர் ஜான் புக்கானன். இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை (2003, 2007) உலக கோப்பை வென்று உள்ளது. பின்னர் ஐ.பி.எல்., கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப் பட்டார். ஆனால் இவரது பயிற்சியில், கோல்கட்டா அணி கடந்த தொடரில் கடைசி இடம் தான் பெற்றது.

கங்குலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது, "சுழற்சி முறை' கேப்டன் போன்ற இவரது அணுகுமுறை பலத்த எதிர்ப்பை கிளப்பியது. வெறுப்படைந்த அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஷாருக்கான், பயிற்சியாளர் பதவியில் இருந்து புக்கானனை அதிரடியாக நீக்கினார். ஷாருக்கானின் இந்த செயல் தனக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளித்தது என்கிறார் புக்கானன்.

இதுகுறித்து அவர் கூறியது:கோல்கட்டா அணியை ஐந்து ஆண்டுகளில் நல்லமுறையில் உருவாக்க வேண்டும் என்பதுதான் ஒப்பந்தம். ஆனால் ஷாருக் கான், தனது மனதை மாற்றி, பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளித்தது. தற்போது எந்த அணிக்கும் பயிற்சியாளராக இல்லை. அதற் கான வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியாக உள்ளது.கங்குலி நட்சத்திர வீரராக இருக்கலாம்.

ஆனால் கேப்டன் என்ற முறையில் தனது அணியை போட்டியில் வெற்றிபெற வைக்க முடிய வில்லை. இதனால் நான் அவரை நம்பவில்லை. 9 போட்டிகளில் கடைசி ஓவர்களில் தோல்வியடைந் தோம். ஐந்து போட்டிகளில் கடைசி பந்தில் தோற்றோம். முதல் தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற போது, எனது எண்ணம் கிரிக்கெட் டுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் இருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எட்டு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்து 2007 உலக கோப்பை வென்றபின் இதை முடித்து கொண்டேன்.இவ்வாறு புக்கானன் கூறினார்.

0 comments:

Post a Comment