இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் கெடுத்த ஆஸ்திரேலிய ரசிகரின் செயல்

ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதிய 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியன்று இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த விடுதியில் காலை 4.30 மணியளவில் தீப்பிடித்துள்ளதை அறிவிக்கும் எச்சரிக்கை மணியை அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் ஒலிக்கச் செய்து அச்சுறுத்தியதாக சிட்னி செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் கும்பலான பெனடிக்ஸ் (வெறியர்கள்) என்ற அமைப்பின் தலைவரான வாரன் லெவிங்ஸ்டன் என்பவர் இதுபற்றி கூறுகையில்;

"100 உறுப்பினர் கொண்ட இந்தக் குழுவிலிருந்து ஒருவர் இந்தத் தீ எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டார். இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் கெடுக்க வேண்டும் என்றே இது செய்யப்பட்டது' என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீ எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து இங்கிலாந்து வீரர்களை அதிகாலை 4.30 மணிக்கு விடுதி நிர்வாகிகள் எழுப்பி அப்புறப்படுத்தினர். பிறகு இரண்டு தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இங்கிலாந்து வீரர்கள் தங்கள் இரவு உடையுடன் தெருக்களில் நின்றுள்ளனர். சுமார் 2030 நிமிடங்கள் அவர்கள் தூக்கம் போனதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனால் இங்கிலாந்து அணி மறுநாள் டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்து 102 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு டெஸ்ட் போட்டியிலும் இனிங்ஸ் தோல்வியைத் தழுவியது

0 comments:

Post a Comment