டோனி விருப்பத்தால் டிராவிட் தேர்வு
ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6 வீரர்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர்.
முன்னாள் கேப்டனான அவர் சுமார் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளார். கடைசியாக அவர் 2007-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஆடினார்.
டிராவிட் இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவதற்கு கேப்டன் டோனியின் விருப்பம்தான் காரணம்.
டோனி கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதன்படி கங்குலி, டிராவிட்டை ஒரம் கட்டினார். தற்போது அணிக்கு நிலைத்து நின்று ஆடக்கூடிய பேட்ஸ்மேன் ஒருவர் தேவை என்று டோனி கருதினார். இதனால் டிராவிட் இடம் பெறுவதை அவர் விரும்பினார்.
தேர்வு குழு உறுப்பினர்களுக்கு டிராவிட்டை மீண்டும் அணியில் சேர்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் டோனி அவருக்கு ஆதரவாக இருந்தார். இதனால் 2 ஆண்டு இடைவேளைக்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இதே போல தேர்வு குழு கூட்டத்தில் பிரவீன் குமாருக்கு ஆதரவாக டோனி இருந்தார். வேகப்பந்து வீரர்களில் முனாப்பட்டேல், பிரவீன்குமார் ஆகிய ஒருவரை தேர்வு செய்வதில் நீண்ட நேரம் விவாதம் நடந்தது. அப்போது பிரவீன்குமார் இடம் பெறுவதை டோனி விரும்பினார். அதன்படி அவர் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணியின் டிராவிட் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு ஒய்வு பெற்ற முன்னாள் கேப்டன் கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வரவேற்று உள்ளனர்.
0 comments:
Post a Comment