சானியா சறுக்கல்

டென்னிஸ் ரேங்கிங் பட்டியலில் 3 இடங்கள் பின்தங்கினார் இந்தியாவின் சானியா மிர்சா (83 வது இடம்). ர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரேங்கிங் பட்டியலை நேற்று வெளியிட்டது. பெண்கள், ஒற்றையர் பிரிவில் 80 வது இடத்திலிருந்த இந்தியாவின் சானியா மிர்சா 3 இடங்கள் பின்தங்கி 83 வது இடத்தை கைப்பற்றி உள்ளார்.

இரட்டையர் பிரிவில் இவர் 49 வது இடத்தை தக்கவைத்துக் கொண் டுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சோம்தேவ் தேவ்வர்மன் 153 வது இடத்தில் உள்ளார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் 8 வது இடத்திலிருந்த மகேஷ் பூபதி 9 வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். மற்றொரு இந்தியவீரர் லியாண்டர் பயஸ் 6 வது இடத்தில் நீடிக்கிறார்.

0 comments:

Post a Comment