ஐதராபாத்தில் உலக பாட்மின்டன் போட்டி

ஐதராபாத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் நாளை துவங்குகிறது. இத்தொடருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திருப்தி தெரிவித்தார். ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் 17வது உலக பாட்மின்டன் சாம்பியன் ஷிப் தொடர் நாளை துவங்கி, வரும் 16ம் தேதி வரை நடக்க உள்ளது. கச்சிபவுலி உள்ளரங்கு மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில் இந்தியாவின் செய்னா நேவல், டென்மார்க்கின் பீட்டர் ஹோக் கேட், ராஸ் முசன் உள்ளிட்ட நட்சத் திரங்கள் பங்கேற்கின்றனர்.

இத்தொடருக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கவராத அமைப்பு மிரட்டல் விடுத்திருப்ப தாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. லாகூரில் இலங்கை வீரர்களை குறி வைத்தது போல மீண்டும் ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இதை யடுத்து ஐதராபாத் போலீசார் உஷாராயினர். போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு வழங்க முடிவு செய்தனர்.

இது குறித்து நேற்று டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "" பாதுகாப்பு தொடர் பான வழக்கமான எச்சரிக்கை தான் ஐதராபாத் போலீ சாருக்கு தெரிவிக்கப் பட்டது. உலக பாட் மின்டன் தொடருக்கென குறிப்பிட்டு எவ்வித மிரட்டலும் விடுக்கப்பட வில்லை. ஆனாலும், ஐதராபாத் போலீசார் பாது காப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கை ளையும் மேற்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு வீரருக்கும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். யாரும் அச்சப்படதேவை யில்லை. உலக பாட்மின்டன் தொடர் முழு பாதுகாப்புடன் நடக்க இருப்பது குறித்து மிகுந்த திருப்தி அடைகிறேன்,'' என்றார்

0 comments:

Post a Comment