பிராட்மேனுக்கு பிறகு சிறந்த பேட்ஸ்மேன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் எடுத்துள்ள ஆஸ்தி ரேலிய வீரர் ஆலன்பார்டர் 150 டெஸ்டில் 11,174 ரன் எடுத்து இருந்தார்.

தற்போது ஆசஷ் டெஸ்ட் தொடரில் அவரை பாண்டிங் முந்தினார். பாண்டிங் 134 டெஸ்டில் 11,188 ரன்கள் எடுத்து அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். உலக அளவில் அவர் 3-வது இடத்தில் உள்ளார்.

தெண்டுல்கர் (இந்தியா) 12,773 ரன் எடுத்து முதலிடத்திலும், லாரா (வெஸ்ட்இண் டீஸ்) 2-வது இடத்திலும் உள்ளனர்.

இதற்கிடையே தன்னை முந்திய பாண்டிங்கை ஆலன் பார்டர் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான அவர் இது தொடர்பாக கூறியதாவது:-

டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி என மூன்றிலும் பாண்டிங் முத்திரை பதித்து வருகிறார். என்னை பொறுத்தவரை டான் பிராட்மேனுக்கு பிறகு ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன்
அவர்தான்.

கிரேக்சேப்பல், ஸ்டீவ் ஆகியோரும் சிறந்த பேட்ஸ் மேன்கள்தான். இவர்களை விட எல்லாம் பாண்டிங் மேலானவர்.

இவ்வாறு ஆலன்பார்டர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment