திராவிட் வருகையால் இந்திய கிரிக்கெட் அணிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறினார். இதுகுறித்து தில்லியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தின போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு ராகுல் திராவிட் திரும்பி வந்துள்ளார். அவரது வருகை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இலங்கை, நியூஸிலாந்து அணிகளுடனான முத்தரப்பு நாடுகள் கிரிக்கெட் போட்டியின்போது திராவிட்டின் அனுபவம் இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெங்களூரில் நடைபெற்ற 4 நாள் பயிற்சி முகாமுக்குப் பின்னர் இந்திய...