சாம்பியன் லீக் "T20' போட்டிக்கான மைதானங்கள்

அக்டோபர் 8 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெறும் சாம்பியன் லீக் "இருபதுக்கு 20' கிரிக்கெட் போட்டிகள் டில்லி, பெங்களூர், ஹைதராபாத் மைதானங்களில் நடைபெறுமென்று சாம்பியன் லீக் தலைவர் லலித் மோடி அறிவித்துள்ளார்.

இந்த சாம்பியன் லீக் "2020' கிரிக்கெட் தொடரில் 12 அணிகள் பங்கேற்கின்றன. ஐ.பி.எல். "இருபதுக்கு20' இரண்டாவது தொடரில் இறுதிப் போட்டியில் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் தோல்வியடைந்த பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் 2009 லீக் சீசனில் அதிக போட்டிகளை வென்ற டில்லி டேர் டெவில்ஸ் அணிகள் இதிலடங்கும்.

அவுஸ்திரேலிய உள்நாட்டு "2020' கிரிக்கெட் தொடரில் இறுதியில் மோதிய விக்டோரியா புஷ் ரேஞ்சர்ஸ், நியூசவுத் வேல்ஸ் ப்ளூ, தென்னாபிரிக்காவிலிருந்து கேப் கோப்ராஸ், டைமண்ட் ஈகிள்ஸ் , நியூஸிலாந்திலிருந்து ஒடாகோ வோல்ட்ஸ் , மேற்கிந்திய தீவுகளிலிருந்து டிரினிடாட் அன்ட் டுபாகோ, இலங்கையிலிருந்து வயாம்பா ஆகிய அணிகள் இதில் பங்கு பெறுகின்றன.

இங்கிலாந்திலிருந்து வரும் அணி ஆகஸ்ட் 25 ஆம் திகதி அறிவிக்கப்படும்.

12 அணிகள் 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக பிரிக்கப்படும். லீக் முறையில் ஒவ்வொரு பிரிவிலும் போட்டிகள் முடிவுற்ற நிலையில், 4 பிரிவுகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். அதன் பிறகு இதிலிருந்து 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்

0 comments:

Post a Comment