ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் : ஹைடன் உறுதி

ஐ.பி.எல்., போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன்,' என ஹைடன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மாத்யூ ஹைடன். தற்போது ஐ.பி.எல்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் கிரிக்கெட் அகாடமி துவங்க திட்டமிட்டிருக்கும் அவர், தொடர்ந்து ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன் என்கிறார். இதுகுறித்து ஹைடன் கூறியது:சென்னை சூப்பர் கிங்ஸ், "டுவென்டி-20' போட்டிகள் என சென்னை, என்னை மிகவும் கவர்ந்து விட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமையகத்தை கூட இங்கு அமைக்கலாம். ஐ.பி.எல்., தொடரில் நீண்ட ஆண்டுகள் பங் கேற்று, திறமையை வெளி ப்படுத்த விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயிற்சி அகாடமி துவங்க உள்ளேன். இதன் மூலம் சிறந்த கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்ல, வாழ்க்கையிலும் அவர்கள் சிறந்து விளங்கும் வகையில் உருவாக்குவோம்.

நம்பிக்கை உள்ளது: ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. நடந்து முடிந்த இரு டெஸ்ட் போட்டிகளை பார்த்தால், இரு அணிகளின் கைகளும் மாறி மாறி ஓங்கி இருந்தது. தற்போது இங்கிலாந்து முன்னணியில் உள்ளது.இருப்பினும் சிறந்த கேப்டன் மற்றும் வியக்கத்தக்க வீரர்களை கொண்டுள்ள எங்கள் அணி நம்பிக்கையுடன் உள்ளது.

நன்றி பிளின்டாப்: பிளின்டாப் ஓய்வு பெற எடுத்த முடிவு சரியோ, தவறோ, ஆனால் கிரிக்கெட்டில் சிறந்த வீரர். நிறைய சாதித்துள்ளார். ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட்டில் இருந்து விலகாததற்கு நன்றி சொல்ல வேண்டும். இருப் பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடவருவதற்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.

கிரிக்கெட் வளர்ச்சி: கிரிக்கெட் வளர்ச்சிக்கு"டுவென்டி-20' தொடர் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இதன் மூலம் கிரிக்கெட்டை காப் பாற்றியுள்ளோம். கிரிக்கெட்டிற்கு மாற்றமும், புத்துணர்ச்சியும் தேவைப்பட்டது. இந்நிலையில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' என பிரிந்த நிலையில் பலவிதமான புதிய சவால்கள்வருவது இயற்கை தான்.

ஏற்க வேண்டும்: கால்பந்தில் பிரேசில் வீரர் காகா, இங்கிலாந்தின் பெக்காம் போன்றவர்கள் ஏதாவது ஒரு அணி நிர்வாகத்தில் இணைந்து விளையாட விரும்புவார்கள். தேசிய அணிக்காகவும் வந்து விளையாடுவார்கள். கிரிக்கெட்டிலும் இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஓய்வுக்கு பின்: எப்போதும் கிரிக்கெட்டை விரும் பிக் கொண்டிருந்த நான், ஓய்விற்கு பின் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளேன். எல்லோரும் விரும்பும் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டியில் இனி வாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு ஹைடன் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment