இந்தியாவில் உலககோப்பை உறுதி

பாதுகாப்பு குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) முழு திருப்தி அளித்துள்ள நிலையில், உலகக்கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள்) அடுத்த ஆண்டு இந்தியாவில் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலககோப்பை ஹாக்கி தொடர், அடுத்த ஆண்டு (2010) இந்திய தலைநகர் டில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் 7 ம் தேதி முதல் 20 ம் நடக்க உள்ளது. இருப்பினும் பாதுகாப்பு பிரச்னைகளின் காரணமாக இத்தொடரை மலேசியாவில் நடத்தவும் ஆலோசனை நடைபெற்று வந்தது.ஆனால் இந்தியாவில் இத்தொடர் நடப்பது தற்போது உறுதியாகி உள்ளது.

இது குறித்து சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் லியான்ட்ரோ நேக்ரே கூறுகையில்,"" உலககோப்பை தொடரை நடத்துவதில் பாதுகாப்பு குறைபாடு முக்கிய பிரச்னையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிக்கிறது. போட்டி நடக்கும் மைதானம், வீரர்கள் தங்க உள்ள ஓட்டல்கள், போக்குவரத்து நடைமுறைகள் ஆகியவற்றை பார்வையிட்டோம். அவற்றில் குறைபாடுகள் எதுவும் இல்லை,'' என்றார்.

28 ஆண்டுகளுக்குப் பின்...: இதற்கு முன் கடந்த 1982 ம் ஆண்டு இந்தியாவில் (மும்பை) உலககோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக இந்தியா இத்தொடரை நடத்த உள்ளது. உலககோப்பை தொடரை இந்தியா கடந்த 1975 ம் ஆண்டு கைப்பற்றியுள்ளது. வரும் 2010 ம் ஆண்டு ஹாக்கி உலககோப்பையை "ஹீரோ ஹோண்டா' வழங்க உள்ளது

0 comments:

Post a Comment