ஐசிசி பிரபலங்கள் பட்டியலில் 5 பேர் சேர்ப்பு

ஐசிசி பிரபலங்கள் பட்டியலில் 4 இங்கிலாந்து நாட்டினர் உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டனர்.

முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச், டெனிஸ் காம்ப்டன், ஹரோல்டு லார்வுட், பிராங்க் வூலி ஆகிய இங்கிலாந்து வீரர்களுடன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிச்சி பெனாட்டும் சேர்க்கப்பட்டார்.

இதற்கான நிகழ்ச்சி, ஆஸ்திரேலிய- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளையின்போது நடந்தது.

ஐ.சி.சி. தலைவர் டேவிட் மோர்கன் அவர்களிடம் அதைக் கெüரவிக்கும் தொப்பியைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜைல்ஸ் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜேக் கிளார்க், எம்.சி.சி. செயலாளர் கீத் பிராட்ஷா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.




பிரபலங்களின் சிறு குறிப்பு:

கிரஹாம் கூச்: பிரபலம் வாய்ந்த பேட்ஸ்மேன். 118 டெஸ்ட் போட்டிகளில் 20 சதம் உள்பட 8900 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 42.58. ஐந்து ஆண்டு கேப்டனாக இருந்துள்ளார். 1999-ம் ஆண்டு லார்ட்ஸில் இந்தியாவுக்கு எதிராக நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 333 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 123 ரன்களும் சேர்த்த பெருமைக்குரியவர். ஒரே டெஸ்டில் அதிக ரன்களைச் சேர்த்த சாதனையை இன்றும் அவர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

125 ஒருதின போட்டிகளில் 8 சதங்கள் உள்பட 4290 ரன்களைச் சேர்த்துள்ளார்.

ரிச்சி பெனாட்: ஆஸ்திரேலியாவிலிருந்து இச் சிறப்பை பெறும் 13-வது வீரர். சுழற்பந்து வீச்சாளாரான இவர் 12 ஆண்டுகளில் 63 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 248 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சராசரி 27.03.

டெனிஸ் காம்ப்டன்: "ஸ்வீப் ஷாட்'டில் தனித்துவம் வாய்ந்தவர். 78 டெஸ்ட் போட்டிகளில் 5807 ரன்களைச் சேர்த்துள்ளார். அதில் 17 சதங்களும் அடங்கும்.

பிராங்க் வூலி: 64 டெஸ்ட் போட்டிகளில் 3283 ரன்களைச் சேர்த்துள்ளார். 83 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

ஹரோல்டு லார்வுட்: பந்துவீச்சாளரான இவர் 21 டெஸ்ட் போட்டிகளில் 78 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

0 comments:

Post a Comment