வெளிநாட்டில் வங்கதேச கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்றது.
அர்னாஸ் வேலில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது மோர்டசா தலைமையிலான வங்கதேச அணி.
கிறிஸ் கெயில் உள்ளிட்ட முதல்நிலை வீரர்கள் சம்பள ஒப்பந்தம் காரணமாக போர்க்கொடி தூக்கியுள்ளதால் இரண்டாம் நிலை அணியை இப்போட்டிக்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அனுப்பியது கூறத்தக்கது.
இப்போட்டியின் கடைசி நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
276 ரன்களைச் சேர்த்தால் வெற்றி என்ற நிலையுடன் 2-வது இன்னிங்ûஸத் தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் மஹ்மதுல்லா மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தார். இவர் 52 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 238 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் 307 ரன்களும் சேர்த்தன. 345 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்ûஸ வங்கதேசம் இழந்தது.
இதற்கு முன்னர் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது வங்கதேசம். சிட்டகாங்கில் நடந்த போட்டியில் ஜிம்பாப்வேயை 226 ரன்களில் வென்றது. மொத்தத்தில் 2-வது முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
சுருக்கமான ஸ்கோர்:
முதல் இன்னிங்ஸ்: வங்கதேசம் 238 (முஸ்ரபே மோர்டசா 39, முஸ்பிகுர் ரஹீம் 36, கெமார் ரோச் 3-46). மே.இ.தீவுகள் 307 (பிலிப்ஸ் 94, தேவ் பெர்னார்டு 53, டேரன் சாமி 48, மஹ்மதுல்லா 3-59, ரூபெல் ஹுசைன் 3-76).
2-வது இன்னிங்ஸ்: வங்கதேசம் 345 (தமீம் இக்பால் 128, சித்திக் 78, ரஹீம் 37, டேரன் சாமி 5-70, கெமார் ரோச் 3-67. மே.இ.தீவுகள் 181 (தேவ் பெர்னார்டு 52 நாட் அவுட், மஹ்மதுல்லா 5-51, சஹிப் அல் ஹசன் 3-39).
இவ்விரு அணிகளிடையிலான இரண்டாவது போட்டி வரும் 17-ம் தேதி கிரெனடாவில் உள்ள செயின்ட் ஜார்ஜில் தொடங்குகிறது
0 comments:
Post a Comment