பிளின்டாப் வழியில் மற்ற வீரர்களும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' போட்டிகளில் மட்டும் பங்கேற்று அதிக பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளனர்,'' என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மட்டும் ஓய்வு பெறுவது அதிகரித்துள்ளது. ஏற்கனவே டெஸ்ட் போட்டிகள் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண் டுள்ளது என்ற கருத்து உள்ளது. இந்நிலையில் வீரர்களின் இதுபோன்ற செயல்களால் ரசிகர்கள், சிறந்த வீரர்களின் ஆட்டத்தை காணமுடியாமல் போகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டன் கூறியது:இப்போதெல்லாம் நாள் முழுவதும் விளையாடி, 25 ஓவர்கள் பந்து வீசுவதற்கு எந்த வீரர்களும் தயாராக இல்லை. அதற்கு பதில் ஆறு வார கால தொடரில் பங்கேற்று, ஒரு நாளைக்கு 4 ஓவர்கள் மட்டும் பவுலிங் செய்து விட்டு வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக பணம் சம்பாதிக்கத்தான் விரும்புகிறார்கள். இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, ஒருநாள்மற்றும் "டுவென்டி-20'போட்டிகளில் மட்டும் பங்கேற்க விரும்புகிறார்கள்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஒருநாள் போட்டிகளை குறைத்து, "டுவென்டி-20' போட்டிகளை அதிகரிப்பது தான் சிறந்த வழியாக இருக்கும் பிளின்டாப் திட்டம்: இங்கிலாந்து அணியின் பிளின்டாப் பிரபலமான வீரர். தற்போது அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார். ஏனெனில் காயம் காரணமாக உடல் ஒத்துழைக்கவில்லை என்கிறார். ஆனால் ஒருநாள் மற்றும்"டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அதிக அளவு பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். அவரது இந்த முடிவு ஏன் மிகச்சிறந்ததாக இருக்கக்கூடாது.
குறைந்த டெஸ்ட்: இந்திய அணி இந்த ஆண்டு ஆறு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பங்கேற்கும் வகையில் அட்டவணை உள்ளது. இது போதுமானதா? அல்லது மற்ற வகைப்போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. "டுவென்டி-20' இல்லை: இந்திய அணி வரும் ஏப்ரல் மாதம் (2010) வெஸ்ட் இண்டீசில் நடக்க இருக்கும் "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க செல்கிறது. அதில் இந்திய அணி, 6 "டுவென்டி-20', போட்டிகளில் பங்கேற்க உள்ளது.இதில் முக்கியமானது என்னவென்றால், வெஸ்ட் இண்டீஸ் செல்லும் முன்பு, ஒரு "டுவென்டி-20' போட்டியில் கூட இந்திய அணி பங்கேற்று இருக்காது. இப்படித்தான் அட்டவணை உள்ளது. இவ்வாறு கிறிஸ்டன் தெரிவித்தார்
0 comments:
Post a Comment