சானியாவுக்கு பின்னடைவு

விம்பிள்டனில் 2-வது சுற்றிலேயே தோல்வியைத் தழுவியதால் உலக டென்னிஸ் தரவரிசையில் 7 இடங்கள் பின்னடைவு பெற்றுள்ளார் இந்தியாவின் சானியா மிர்சா.

விம்பிள்டன் போட்டிக்கு முன்னர் 78-வது இடத்தில் இருந்த அவர், தற்போது 85-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதே சமயம் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து 37-வது இடத்தில் நீடிக்கிறார்.

விம்பிள்டனில் பிரதானச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் போன சோம்தேவ் தேவ் வர்மனும் 3 இடங்கள் பின்னடைவு பெற்றுள்ளார். தற்போது 132-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பிரகாஷ் அமிர்தராஜ் 5 இடங்கள் கீழிறங்கி, 159-வது இடத்தில் உள்ளார்.

இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் மகேஷ் பூபதி ஓரிடம் முன்னேறி 8-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் விம்பிள்டனில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் தனது பார்ட்னருடன் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வியைத் தழுவிய லியாண்டர் பயஸ், தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறார்

0 comments:

Post a Comment