செய்னாவுக்கு "தட்டம்மை'

இந்திய பாட்மின்டன் வீராங்னை செய்னா நேவல், தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அடுத்த மாதம் சொந்த மண்ணில் நடக்க உள்ள உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில், செய்னா பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ளார் பாட்மின்டன் வீராங்கனை செய்னா நேவல். ஆனால் இந்த மகிழ்ச்சியை கொண் டாட, அவருக்கு உடல் நலம் சரியில்லை. தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள் ளார் செய்னா. அடுத்த மாதம் ஐதராபாத்தில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்க உள்ளது. தற்போது ஓய்வில் இருக்கும் செய்னா, இத்தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்னா கூறியதாவது: கடந்த சனிக்கிழமை முதல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். ஆனால் நேற்று எனது தோள் பகுதிகளில் சிறிய கொப்பளங்கள் தோன்றின. ஆரம்பத்தில் நான் இவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பின் உடல் முழுவதும் கொப்பளங்கள் பரவி விட்டன. டாக்டரிடம் பரிசோதித்த போது, தட்டம்மை நோய் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் ஓய்வில் இருக்குமாறு டாக்டர் ஆலோசனை அளித்துள்ளார். அடுத்த மாதம் சொந்த மண்ணில் உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் துவங்க உள்ள நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இருப்பினும் உலககோப்பையில் நான் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படாது என கருதுகிறேன். தீவிர பயிற்சி செய்ய வேண்டிய காலத்தில், ஓய்வில் இருக்க வேண்டி உள்ளது. இருப்பினும் நான் கடந்த மாதம் முழுவதும் நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டது திருப்தி அளிக்கிறது. இவ்வாறு செய்னா கூறினார்

0 comments:

Post a Comment