இரண்டாம் இடத்துக்கு முன்னேறினார் யுவராஜ் சிங்

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற ஒருதின கிரிக்கெட் தொடர் மூலம் ஐசிசி தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்.

அப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, யுவராஜ் சிங் மட்டுமல்லாது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் கிறிஸ் கெயில், சந்தர்பால் ஆகியோரும் அச்சுறுத்தலாக இருந்தனர்.

ஆனால் தோனி தனது வலுவான ஆட்டத்தால் அவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

முறையே 3 போட்டிகளில் 41, 95, 46 நாட் அவுட் ரன்களைக் குவித்து, தொடர் நாயகன் விருதையும் தோனி பெற்றார்.

செயின்ட் லூசியாவில் ஞாயிற்றுக்கிழமை 4-வது போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.

தோனிக்கும் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ள யுவராஜ் சிங்கிற்கும் இடையே 44 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

இடதுகை ஆட்டக்காரரான யுவராஜ் சிங், முறையே 3 போட்டிகளில் 131, 35, 2 ரன்களைச் சேர்த்ததன் மூலம் தரவரிசையில் 2 இடங்கள் உயர்ந்துள்ளார்.

இதனால் சந்தர்பாலும், கெயிலும் தலா ஓரிடம் கீழிறங்கி முறையே 3, 4-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

3-வது இடம்: தொடரை 2-1 என கைப்பற்றினாலும் குழுத் தரவரிசையில் 2-ம் இடத்துக்கு இந்திய அணி முன்னேறமுடியவில்லை.

அத் தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே 3-ம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேற முடியும். ஆனால் கிங்ஸ்டனில் நடந்த 2-வது போட்டியில் தோல்வியைத் தழுவியதால் அந்த வாய்ப்பை இழந்தது

0 comments:

Post a Comment