முதலிடத்தில் கம்பீர்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் கெüதம் கம்பீர் முதலிடம் பிடித்தார்.

புதன்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில், கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

2005-க்குப் பிறகு இந்திய வீரர் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை. மார்ச் 2005-ல் திராவிட் குறைந்த கால அளவுக்கு முதலிடம் பிடித்தார். 1999 முதல் 2005 வரை 36 டெஸ்டுகளுக்கு திராவிட் முதலிடத்தில் இருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் 1994 முதல் 2002-க்குள் 125 டெஸ்டுகளுக்கு முதலிடத்தில் இருந்துள்ளார். அவரைத் தவிர குண்டப்பா விஸ்வநாத் (1975-ல் 7 டெஸ்ட்), சுநீல் காவஸ்கர் (1978-80-ல் 46 டெஸ்ட்), திலிப் வெங்சர்க்கார் (1987-88-ல் 17 டெஸ்ட்) ஆகியோரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

ஒரு தின ஆட்டத் தரவரிசையில் மகேந்திர சிங் தோனி முதலிடத்திலும், யுவராஜ் சிங் 2-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளீதரனுக்கு பின்னடைவு: 2006 பிப்ரவரிக்குப் பின் முதல்முறையாக இலங்கை பந்துவீச்சாளர் முத்தையா முரளீதரன் 2-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்காததால் அவருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டது.

தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பேட்ஸ்மேன் தரவரிசை: 1. கம்பீர், 2. யூனிஸ் கான் (பாகிஸ்தான்), 3. குமார் சங்கக்கரா (இலங்கை), 4. சந்தர்பால் (மேற்கிந்தியத் தீவுகள்), 5. முகமது யூசுப் (பாகிஸ்தான்).

பந்துவீச்சாளர் தரவரிசை: 1. ஸ்டெயின், 2. முரளீதரன், 3. மிட்செல் ஜான்சன், 4. ஸ்டூவர்ட் கிளார்க் (ஆஸ்திரேலியா), 5. மகாயா நிதினி (தென் ஆப்பிரிக்கா)

0 comments:

Post a Comment