பற்றி எரிகிறது ஆஸி., மீடியா

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கொடுக்கப்படும் தவறான தீர்ப்புகள் குறித்து ஆஸ்திரேலிய மீடியா கடும் கோபத்தில் உள்ளது. இங்கு இதுதான் இப்போது பற்றி எரியும் பிரச்னையாக உள்ளது.

இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இரண்டாவது டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இக்கட்டான நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை விட, அம்பயர்கள் பில்லி டாக்ட்ரோவ் (வெ.இண்டீஸ்)மற்றும் ருடி கோயர்ட் சனை (தெ.ஆப்.,) சமாளிப் பது தான் பெரும்பாடாக இருந்தது.


சர்ச்சைக்குரிய அவுட்கள்:

பிளின்டாப் வீசிய "நோபாலில்' பீட்டர்சனிடம் பிடிகொடுத்தார் காடிச். ஆனால் டாக்ட்ரோவ் கவனிக்கவில்லை. ஹியுஸ் அடித்த பந்தை, ஸ்டிராஸ் தரையில் பட்டு பிடித்தார். ஆனால் கொயர்ட்சன் மூன்றாவது நடுவரிடம் கேட்காமல் அவுட் கொடுத்தார்.சுவான் வீசிய பந்தை,ஹசி தரையில் அடித்த நிலையில் டாக்ட்ரோவ் அவுட் கொடுத்து வெளியேற்றினார்.


ஏமாற்று வேலை:

இதுகுறித்த ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும்"தி டெய்லி டெலிகிராப்ஸ்' பத்திரிகையில்,"" இதே போட்டியில் ஹாரிட்ஜ் பிடித்த கேட்ச் குறித்து மூன்றாவது நடுவரிடம் முறையிட்ட அம்பயர்கள், ஹியுஜின் சந்தேகத்திற்கு ஏன் மூன்றாவது நடுவரிடம் முறையிடவில்லை. இது முழு ஏமாற்று வேலை,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிக்க முடியாது:

"தி டெலிகிராப்' பத்திரிகையில்,""நோபாலில் காடிச் அவுட் மற்றும் ஹசிக்குதவறாக தீர்ப்பு வழங்கிய அம்பயர் டாக்ட்ரோவை மறக்கவே முடியாது. ஸ்டிராஸ் கேட்ச் குறித்து, மூன்றாவது அம்பயரிடம் முறையிடாத கோயர்ட்சனுக்கு மன்னிப்பே கிடையாது. இதனால் தொடரின் முடிவே மாறுவதற்கு வாய்ப்புள்ளது,'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல "தி ஆஸ்திரேலியன்ஸ்', "சிட்னி மார்னிங் ஹெரால்டு' போன்ற பத்திரிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 comments:

Post a Comment