சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடருக் கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரூ, ஐதராபாத் மற்றும் டில்லியில் போட்டிகள் நடக்க உள்ளன. பைனல், ஐதரா பாத்தில் நடக்கிறது.
உள்ளூர் "டுவென்டி-20' தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடரில் மோத உள்ளன. கடந்த 2008 ம் ஆண்டு, முதலாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் நடக்கவிருந்தது. ஆனால் மும்பை பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இத்தொடர் கைவிடப் பட்டது. தற்போது இரண்டாவது தொடர் வரும் அக். 8 ம் தேதி இந்தியாவில் நடக்க உள்ளது.
12 அணிகள்: மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன. இந்திய தரப்பில் ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடரின் நடப்பு சாம்பியன் டெக் கான் சார்ஜர்ஸ், இரண்டா வது இடம் பிடித்த பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ் மற்றும் டில்லி டேர்டெவில்ஸ் ஆகிய மூன்று அணிகள் இடம் பெற்று உள்ளன. ஆஸ்தி ரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கி லாந்து தரப்பில் தலா இரண்டு அணிகளும், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை தரப்பில் தலா ஒரு அணி களும் தொடரில் பங்கேற்க உள்ளன.
போட்டி முறை:மொத்தம் உள்ள 12 அணி கள் 4 பிரிவுகளாக பிரிக்கப் பட்டு, லீக் போட்டியில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களில் வரும் அணி கள் 2 வது சுற்றுக்கு (8 அணிகள்) தகுதி பெறும். இதில், 2 பிரிவாக அணிகள் போட்டிகளில் பங்கேற்கும். இதன் முடிவில் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். வரும் அக். 8 ம் தேதி நடக்கும் தொடரின் முதல் போட்டியில் பெங்களூரூ அணி, தென் ஆப்ரிக் காவின் கோப்ராஸ் அணி யுடன் மோத உள்ளது. அரை யிறுதிப் போட்டிகள் அக். 21 மற்றும் 22 ம் தேதிகளில் நடக்கிறது. பைனல் அக். 23 ம் தேதி ஐதராபாத்தில் நடக்க உள்ளது. மொத்தம் 23 போட்டிகள் 16 நாட்களில் நடக்க உள்ளன. போட்டி கள் இந்திய நேரப்படி மாலை 4, இரவு 8 மணிக்கு துவங்குகிறது. சாம்பி யன்ஸ் லீக் "டுவென்டி-20' கோப்பையை, வரும் 5 ஆண்டுகளுக்கு வழங்கும் உரிமையை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத் தொகை ரூ. 170 கோடி
0 comments:
Post a Comment