ஊக்கமருந்து ஏஜென்ஸி வகுத்துள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட வீரர்கள் தயக்கம் காட்டுவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் குழப்பம் அடைந்துள்ளது.
இதையடுத்து அவசரக் கூட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மும்பையில் கூட்டியுள்ளது.
போட்டிகள் இல்லாத சமயத்திலும் வீரர்கள் தங்களது இருப்பிடத்தை ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை எங்கிருக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி கூறியுள்ளது. அந்த விதிமுறைகள் அடங்கிய படிவத்தில் கையெழுத்திட்டு ஆகஸ்ட் 1-ம்தேதிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுப்பு நாடுகளுக்கு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த விதிமுறையால் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்படுவதாக இந்திய வீரர்கள் தெரிவித்து, கையெழுத்திட மறுத்து வருகின்றனர். இதனால் ஐசிசி விதித்துள்ள காலக் கெடுவுக்குள் படிவத்தை கொடுக்க முடியாத நிலையை பிசிசிஐ பெற்றுள்ளது.
உலக ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்ஸி வகுத்துள்ள விதிகளின் படி, ஒரு வீரர் 18 மாதங்களில் 3 முறை தொடர்ந்து பரிசோதனைக்கு வராவிட்டால், அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்க அறிவுறுத்தியுள்ளது
0 comments:
Post a Comment