செரீனா -வீனஸ் இறுதி மோதல்

இந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் பட்டம் அமெரிக்காவுக்கு உறுதியாகியுள்ளது.

சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் பட்டத்துக்காக மோத உள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு 20 முறை மோதியுள்ளனர். தலா 10 முறை ஒருவரை ஒருவர் வென்றுள்ளனர். ஆதலால் இறுதி ஆட்டம் ரசிகர்களுக்கு மிகவும் விருந்தாக இருப்பது உறுதி.

விம்பிள்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், போட்டித் தரநிலையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ள செரீனா, 6-7 (4), 7-5, 8-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலீனா டேமன்டீவாவை போராடித் தோற்கடித்தார்.

அடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தரநிலையில் முதலிடத்தைப் பிடித்த ரஷிய வீராங்கனை தினாரா சபினாவை 6-0, 6-1 என்ற நேர் செட்களில் எளிதில் வீழ்த்தினார் நடப்பு சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ்.

இன்று ஆடவர் அரையிறுதி: ஆடவருக்கான அரையிறுதி ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளன.

அமெரிக்காவின் ஆன்டி ராடிக்கை எதிர்த்து பிரிட்டனின் ஆன்டி முரேவும், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஜெர்மனியின் டாமி ஹாஸýம் மோதுகின்றனர்.

இதற்கு முன்னர் இந்த ஜோடிகள் மோதிய ஆட்டங்களில் முரே, ஃபெடரர் ஆதிக்கம் கூடுதல் வெற்றி பெற்றுள்ளனர்.

0 comments:

Post a Comment