ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்ட் "டிரா'

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கார்டிப்பில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் 239 ரன்கள் பின்னடைவுடன் தோல்வியை எதிர்நோக்கியிருந்த இங்கிலாந்துக்கு, மோன்டி பனேசர்- ஜேம்ஸ் ஆண்டர்சன் ஜோடி ஆட்டம் டிராவுக்கு வித்திட்டது. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 19 ரன்களைச் சேர்த்தது. ஆனால் 69 பந்துகளைச் சமாளித்தது.
53 பந்துகளைச் சந்தித்து ஆண்டர்சன் 21 ரன்களும், பனேசர் 35 பந்துகளைச் சந்தித்து 7 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பனேசர்-ஆண்டர்சன் ஜோடியின் ஆட்டம் போட்டி "டிரா'வில் முடிவதற்கு காரணமாக இருந்தாலும், அதற்கு முன்னதாக இன்னிங்ûஸ நீட்டித்த பெருமை பால் காலிங்வுட்டையே சேரும். முதல் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இவர் 6 மணி நேரம் களத்திலிருந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 74 ரன்களைச் சேர்த்தார். அதற்காக 245 பந்துகளை எதிர்கொண்டார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களைச் சேர்த்தது.
அடுத்த போட்டி: 5 போட்டிகள் தொடரின் இரண்டாவது டெஸ்ட் லார்ட்ஸில் வரும் வியாழக்கிழமை தொடங்குகிறது. நடப்பு சாம்பியனாகத் திகழும் ஆஸ்திரேலியா, இங்கு 1934-ம் ஆண்டுக்குப் பிறகு தோற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment